For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

டெல்லியை பொருத்தவரை பாஜக எப்போதும் மாற்றான்தாய் மனப்பான்மைதான்- கெஜ்ரிவால் அப்செட்

மாற்றான் தாய் மனப்பான்மையுடன் தான் பாஜக என்றுமே டெல்லியை அணுகும் என முதல்வர் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்

By Dakshinamurthy
Google Oneindia Tamil News

Recommended Video

    பட்ஜெட் 2018-19, தலைவர்கள் என்ன சொல்கிறார்கள்?- வீடியோ

    டெல்லி: மாற்றாந்தாய் மனப்பான்மையுடனே மத்திய அரசு டெல்லியை அணுகும் என மத்திய பொது பட்ஜெட் குறித்து தனது அதிருப்தியை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளிப்படுத்தியுள்ளார்

    2018-19 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் குறித்த தனது விமர்சனங்களை டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதில், தேசிய தலைநகரான டெல்லியின் உட்கட்டமைப்பு பணிகளுக்காக சில முக்கிய நிதி உதவிகளை நான் பட்ஜெட்டில் எதிர்பார்த்தேன். ஆனால், மத்திய அரசு டெல்லியை தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்துவது எனக்கு அதிருப்தியை தருகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    BJP treats Delhi in stepmother mindset

    மேலும் இது புதிதல்ல என்றும் டெல்லியை எப்போதும் பாஜக மாற்றான் தாய் மனப்பான்மையுடனே அணுகும் என்றும், அதனாலேயே டெல்லியில் எந்த உட்கட்டமைப்பு மற்றும் அத்தியாவசிய பணிகள் ஏதும் நடைபெறவில்லை என்றும் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.

    மேலும் இந்தியாவின் வேறு எந்த பகுதியையும் இப்படி நடத்தப்படவில்லை என்றும், மத்தியில் உள்ள பாரதிய ஜனதா அரசு டெல்லி மக்களை தொடர்ந்து இரண்டாம் தர குடிமக்களாகவே நடத்துகிறது என்றும் டெல்லி துணை முதல்வர் மனிஷ் சிசோடியா தெரிவித்துள்ளார்.

    English summary
    BJP treats Delhi as stepmother mindset says Delhi CM Kejriwal. After hearing the budget with no importance or funds to delhi he added BJP always treats as second quality citizens
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X