இடஒதுக்கீட்டுக்கு பா.ஜ.க. எதிரி அல்ல... தேர்தலுக்கு பின்பே பீகார் முதல்வர் குறித்து முடிவு: அமித்ஷா
பாட்னா: இடஒதுக்கீட்டை பாரதிய ஜனதா கட்சி ஒருபோதும் எதிர்க்கவில்லை; பீகாரில் யார் முதல்வர் என்பதை சட்டசபை தேர்தல் முடிவுகள் வந்தபின்னர் தீர்மானிப்போம் என்று பா.ஜ.க. தேசியத் தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
பாட்னாவில் இன்று செய்தியாளர்களிடம் அமித்ஷா கூறியதாவது:
பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அப்போது பா.ஜ.க.வின் நாடாளுமன்ற குழு கூடி முதல்வர் யார் என்பதை தீர்மானிக்கும்.
பீகார் மக்களைப் பொறுத்தவரை நிதிஷ்குமார் தலைமையிலான அரசை காட்டாட்சியாகத்தான் பார்க்கின்றனர். நிச்சயம் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம்.
While interacting with Media in a press conference at Patna. pic.twitter.com/fhlD9EKoAx
— Amit Shah (@AmitShahOffice) October 19, 2015 பீகாரில் லாலு பிரசாத் யாதவ், அவரது மனைவி ராப்ரிதேவி, நிதிஷ்குமார் ஆகியோர் 25 ஆண்டுகள் ஆட்சியில் இருந்துள்ளனர். ஆனால் பீகார் தொடர்ந்தும் பின் தங்கிய மாநிலமாகவே இருக்கிறது. பா.ஜ.க.வால் மட்டுமே இந்த மாநிலத்தில் வளர்ச்சியை ஏற்படுத்த முடியும்.
வளர்ச்சி விவகாரத்தை திசை திருப்பவே இடஒதுக்கீடு மற்றும் மாட்டிறைச்சி விவகாரங்களை ஐக்கிய ஜனதா தளமும் ராஷ்டிரிய ஜனதா தளமும் எழுப்புகிறது.
தலித்துகள், இதர பிற்படுத்தப்பட்டோரின் இடஒதுக்கீட்டை பா.ஜ.க. எதிர்க்காது. நாங்கள் இடஒதுக்கீட்டை ஆதரிக்கிறோம்; தற்போதைய இடஒதுக்கீட்டு முறையை மாற்றியமைக்கமாட்டோம்.
முதல் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 49 தொகுதிகளில் 32 முதல் 34 இடங்களையும் 2வது கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 32 தொகுதிகளில் 22 முதல் 24 இடங்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணி கைப்பற்றும்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications