தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் அடி காத்திருக்கிறது- ஏபிபி சர்வே
Recommended Video

டெல்லி: தென் மாநிலங்களில் பாஜகவுக்கு பெரும் தோல்வி காத்து கிடக்கிறது என ஏபிபி சர்வேயின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
தேசத்தின் மனநிலை என்ற பெயரில் ஏபிபி தொலைக்காட்சி- சிவோட்டர் சர்வே நடத்தியுள்ளது. பல்வேறு அரசியல் விவாதங்களை முன்வைத்தும், அடுத்து நடக்க உள்ள தேர்தலை முன்வைத்தும் இந்த சர்வே நடத்தப்பட்டு இருக்கிறது.
இதில் நாடாளுமன்றத் தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பது குறித்து மாநில வாரியான கருத்துக் கணிப்பை நடத்தியது. தென் மாநிலங்களில் எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு என்பது தெரியவந்துள்ளது.

76 இடங்களில் வெற்றி பெறும்
கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா, தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 தென் மாநிலங்களில் மொத்தம் 129 லோக்சபா தொகுதிகள் உள்ளன. இந்த நாளை லோக்சபா தேர்தல் நடந்தால் மற்ற கட்சிகள் (மாநில கட்சிகள்) 76 இடங்களில் வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வே முடிவுகள்
அது போல் காங்கிரஸ் கூட்டணி 32 இடங்களிலும் வெற்றி பெறும் என்றும் பாஜக கூட்டணி 21 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்றும் சர்வே முடிவுகள் கூறுகின்றன.

காவி மயம்
பெரும்பாலான மாநிலங்களில் பாஜக கூட்டணி வலுவாக இருப்பதாக இந்தக் கருத்துக் கணிப்பு கூறியுள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் அடி காத்திருக்கிறது.

கருத்து கணிப்பு
பாஜக பொதுக் கூட்டங்களில் பேசும் தலைவர்களோ தமிழகத்தில் பாஜக நல்ல இடத்தை பிடிக்கும், தாமரை மலரும் என்கிறார்கள். ஆனால் கருத்து கணிப்பு முடிவுகளோ அவர்களுக்கு எதிராகவே உள்ளது. தென் மாநிலங்களில் அவர்கள் சரிவை சந்திப்பதற்கு காரணம் மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்துவதே ஆகும்.

வெள்ளம்
கர்நாடகம் மற்றும் கேரளத்தில் மழை வெள்ளத்தின் போது மாநில அரசுகள் கோரிய நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. அது போல் இந்த 5 மாநிலங்களிலும் நீட் தேர்வு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, பணமதிப்பிழப்பு விவகாரம் உள்ளிட்டவையே பாஜக சரிவதற்கு காரணங்களாக சொல்லப்படுகின்றன.
-
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications