மணிப்பூர், கோவாவில் பாஜகவுக்கு கைக்கு கிடைத்தது வாய்க்கு கிடைக்காத நிலை: எக்சிட் போல் ரிசல்ட்
இவ்விரு மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும் என்றபோதிலும், ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
டெல்லி: மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக பாஜக வெற்றி பெறும் என்று சி-ஓட்டர் இந்தியா டிவி எக்சிட் போல் தெரிவிக்கிறது.
மணிப்பூரில் மொத்தம் 60 தொகுதிகள் உள்ளன. இதில் 31 தொகுதிகளை வெற்றிபெறும் கட்சி ஆட்சியை பிடிக்கும்.

இந்தியா டிவி கருத்துக் கணிப்புப்படி, காங்கிரஸ் கட்சி 17 தொகுதிகளையும், சி-ஓட்டர் கணிப்புப்படி 23 சீட்டுகளையும் வெல்ல வாய்ப்புள்ளது. இந்தியா டிவி கருத்துக் கணிப்புப்படி பாஜக 25 தொகுதிகளையும், சி-ஓட்டர் கணிப்புப்படி 31 தொகுதிகளையும் பாஜக வெல்ல வாய்ப்புள்ளது.
இந்தியா டிவி கருத்துக் கணிப்புப்படி, பிறர் 9 தொகுதிகளையும், சி-ஓட்டர் கணிப்புப்படி 15 தொகுதிகளையும் கைப்பற்ற வாய்ப்புள்ளது. 40 தொகுதிகளை கொண்ட கோவாவில் பாஜக 15 முதல் 21 இடங்களை வெல்ல வாய்ப்புள்ளது. காங்கிரஸ் 12 முதல் 18 தொகுதிகளில் வெல்லும். ஆம் ஆத்மி 4 தொகுதிகள் வரை வெல்ல வாய்ப்புள்ளது.
இக்கருத்துக் கணிப்புகள்படி, இவ்விரு மாநிலங்களிலும் பாஜக தனிப்பெரும் கட்சியாக வரும் என்றபோதிலும், ஆட்சியை பிடிக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது.
இந்தியாடுடே-மைஆக்சிஸ் கருத்துக் கணிப்புப்படி; கோவாவில் பாஜக 21 இடங்களை வெல்லும். காங்கிரஸ் 9 தொகுதிகளிலும், பிறர் 10 தொகுதிகளிலும் வெல்ல வாய்ப்புள்ளது.
எம்.ஆர்.சி-நியூஸ்எக்ஸ்-கோவா கருத்துக் கணிப்பு:
பாஜக: 15
காங்கிரஸ்: 10
ஆம் ஆத்மி: 7
இந்தியாடுடே-மை ஆக்சிஸ்-மணிப்பூர் கருத்துக் கணிப்பு:
பாஜக:16-22
காங்கிரஸ்:30-36
பி.எஸ்.பி கட்சி: 3-5
பிறர்: 3-6
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications