கூட்டணி இல்லாமலேயே ஆட்சியமைப்போம்.. அடித்து கூறிய அமைச்சர் சதானந்தா கவுடா!
கர்நாடகாவில் எந்த கட்சியின் ஆதரவும் இன்றி பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு: கர்நாடகாவில் எந்த கட்சியின் ஆதரவும் இன்றி பாஜக ஆட்சியமைக்கும் என மத்திய அமைச்சர் சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் மொத்தம் உள்ள 224 தொகுதிகளில் 2 இடங்கள் தவிர 222 தொகுதிகளுக்கு கடந்த 12-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ், பா.ஜனதா, மதசார்பற்ற ஜனதா தளம் ஆகிய 3 கட்சிகள் போட்டியிட்டன.
இந்த தேர்தலில் 72.36 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இந்த வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது.

கடும் போட்டி
தபால் வாக்குகள் எண்ணத்துவங்கியதும், ஆளும் காங்கிரஸ் கட்சிக்கும் எதிர்க்கட்சியான பாஜகவுக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. காங்கிரஸ் பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி முன்னிலை வகித்து வந்தன.

எக்ஸிட் போல்ஸ்
இதனால், தொங்கு சட்ட சபை ஏற்படக்கூடும் என அரசியல் விமர்சகர்கள் கருத்துக்களை தெரிவித்து வந்தனர். தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளும் தொங்கு சட்டசபைக்கு வாய்ப்பு அதிகம் என தெரிவித்தன.

பெரும்பான்மையை தாண்டி
ஆனால் சற்றுமுன் நிலவரப்படி பாஜக 116 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் பாஜக அதையும் தாண்டி 116 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

கூட்டணிக்கு இடமில்லை
முன்னதாக பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சதானந்தா கவுடா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்போம். கூட்டணி என்ற பேச்சுக்கே இடம் இல்லை.

எந்த கட்சியின் உதவியும் இன்றி
எந்த கட்சியின் உதவியும் இன்றி பாஜக கர்நாடகாவில் ஆட்சியமைக்கும். இவ்வாறு பாஜக மூத்த தலைவரும் மத்திய அமைச்சருமான சதானந்தா கவுடா தெரிவித்துள்ளார்.
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications