மண்ணின் மைந்தர் பிரதமர் மோடி என்பதால் பாஜகவிற்கு 81% வாக்கு... டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு
பிரதமர் நரேந்திர மோடி மண்ணின் மைந்தர் என்பதாலேயே குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று 81 சதவீத மக்கள் தெரிவித்துள்ளனர்.
டெல்லி : பிரதமர் நரேந்திர மோடி மண்ணின் மைந்தன் என்பதாலேயே குஜராத் சட்டசபை தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக வாக்களிப்போம் என்று அந்த மாநிலத்தை சேர்ந்த 81 சதவீத பேர் கூறியுள்ளதாக டைம்ஸ் நவ் கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலுக்கான தேதி இன்று பிற்பகல் அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவின் கோட்டையான குஜராத்தில் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் தீவிரமாக முயற்சித்து வருகிறது.

சட்டசபை தேர்தல்
இந்நிலையில் குஜராத் சட்டசபை தேர்தல் குறித்து டைம்ஸ் நவ் தொலைக்காட்சி விஎம்ஆர் இணைந்து நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளன.

அரசியலுக்காக படேல் சிலை
3 கேள்விகள் அடிப்படையில் மக்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன. முதல் கேள்வியாக குஜராத் அரசு இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் படேல் சிலையை நிறுவ திட்டம் வகுத்துள்ளது. இது குறித்த மக்களின் கருத்து கேட்கப்பட்டுள்ளது. அதில் 46 சதவீதம் மக்கள் ஆம் இது நல்ல திட்டம் என்று கூறியுள்ளளனர், ஆனால் வாக்கு வங்கிக்காக என்று 32 சதவீதம் பேர் கூறியுள்ளனர். 22 சதவீதம் பேர் எந்த கருத்தையும் கூறவில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மோடிக்காக பாஜகவுக்கு ஓட்டு
அடுத்த கேள்வியாக பிரதமர் நரேந்திர மோடி மண்ணின் மைந்தர் என்ற அடிப்படையில் குஜராத் தேர்தலில் பாஜகவிற்கு வாக்களிப்பார்களா மக்கள் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கு 2012ல் 60 சதவீதம் பேர் ஆம் என்று கூறிய நிலையில், 2017 சட்டசபை தேர்தலையொட்டி நடத்தப்பட்ட சர்வேயில் ஆம் மோடி மண்ணின் மைந்தர் என்பதால் பாஜகவிற்கு வாக்களிப்போம் என்று 81 சதவீதம் பேர் தெரிவித்துள்ளனர்.

மோடியே சிறந்த முதல்வர்
அடுத்தபடியாக கடந்த 5 ஆண்டுகளில் குஜராத்தின் சிறந்த முதல்வர் யார் என்று எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில். 2012ல் முதல்வராக இருந்த நரேந்திர மோடியே சிறந்த முதல்வர் என்று கருத்து கணிப்பு முடிவில் தெரிய வந்துள்ளது. சுமார் 67 சதவீதம் பேர் நரேந்திர மோடியே சிறந்த முதல்வர் என்று தெரிவித்துள்ளனர்.
அடுத்தபடியாக அனந்திபென் 20 சதவீத மக்களின் ஆதரவைப் பெற்று இரண்டாவது இடத்திலும் தற்போதைய முதல்வர் விஜய் ரூபானி சிறந்த முதல்வர் என்று 13 சதவீதம் பேரும் வாக்களித்துள்ளனர்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
Annamalai: பாஜகவிலிருந்து இன்று விலகுகிறாரா அண்ணாமலை? நிதின் நபினுடன் இன்று சந்திப்பு -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications