மத்தியில் நல்லாட்சியை பாஜக வழங்கும்: அத்வானி! மோடிக்கு புகழாரம்!!
போபால்: மாநிலங்களில் நல்லாட்சி வழங்குவதைப் போல மத்தியில் நிலையான நல்லாட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தெரிவித்தார்.
மத்திய பிரதேச தலைநகர் போபாலில் நடைபெற்ற பாரதிய ஜனதா கூட்டத்தில் அக்கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி, மூத்த தலைவர் அத்வானி, கட்சித் தலைவர் ராஜ்நாத் சிங், மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ்சிங் செளகான், உமாபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்தக் கூட்டத்தில் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து அவரை பிரதமர் வேட்பாளராக அத்வானி அறிமுகப்படுத்தினார். அப்போது கூட்டம் மோடியின் பெயரை உச்சரித்து ஆர்ப்பரித்தது. பின்னர் மோடி, அத்வானி காலை தொட்டு ஆசி பெற்றார். ஆனால் அத்வானியோ வேறொரு பக்கம் திரும்பி வணக்கம் செலுத்தியது மோடி அதிருப்தியாளர்களை திகைக்க வைத்தது.
இதைத் தொடர்ந்து பேசிய அத்வானி, இதுதான் உண்மையான மகா கும்பமேளா.. இந்த உலகில் இப்படி ஒரு ஆதரவாளர்கள் கூட்டத்தை எங்கும் கண்டிருக்க முடியாது.
மோடி ஜி நமது தேசத்தின் அடையாளம் மட்டுமல்ல.. உலகின் அடையாளமும் கூட.
மாநிலங்களில் பாரதிய ஜனதா நல்லாட்சியை வழங்கியது. குஜராத்தில் நரேந்திர மோடி நல்லாட்சி நடத்துகிறார். அவரால் 24 மணி நேரமும் அந்த மாநிலத்தில் மின்சாரத்தை வழங்க முடிந்துள்ளது.
மத்திய பிரதேசத்திலும் நல்லாட்சி கொடுத்துள்ளோம். அதேபோல் மத்தியிலும் நல்லாட்சியை நிலையான ஆட்சியை பாரதிய ஜனதா வழங்கும் என்றார்.
இந்தக் கூட்டத்தில் பேசிய உமாபாரதியும் அத்வானியையும் நரேந்திர மோடியையும் புகழ்ந்தார்
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்!












Click it and Unblock the Notifications