குஜராத்திலேயே இந்த நிலை.. சித்தராமையா ஆளும் கர்நாடகாவில் பாஜக என்னபாடு படப்போகுதோ?
Recommended Video

பெங்களூர்: குஜராத்திலேயே பாஜக இந்த முக்கு முக்கிறதே, கர்நாடகாவில் என்ன நிலையாகுமோ என்ற அச்சம் அக்கட்சியினருக்கு ஏற்பட்டுள்ளது.
குஜராத்தில், வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில், பாஜக முன்னிலை பெற்றாலும், பிறகு காங்கிரஸ் முன்னிலை வகித்தது. இதன்பிறகு இரு கட்சிகளும் நேருக்கு நேர் கடும் போட்டியில் இருந்தன.
ஒருவழியாக திக்கி திணறி, காலை 10.30 மணியளவில் பாஜக மீண்டும் ஓரளவு டீசன்டான முன்னிலை பெறத் தொடங்கியது.

பெரிய வெற்றி இல்லை
ஆனால், ஒருவேளை பாஜகவே இந்த தேர்தலில் வென்றால் கூட அது அக்கட்சியினர் கூத்தாடி கொண்டாடும் அளவுக்கு மகிழ்விக்கும் வெற்றியாக இருக்காது என்றே தெரிகிறது. அடுத்தடுத்த தேர்தல்கள் அவர்களை அச்சுறுத்தும் என்றே கூறப்படுகிறது.

கர்நாடக தேர்தல்
அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற உள்ள, கர்நாடக சட்டசபை தேர்தல் அதற்கு நல்ல உதாரணம். குஜராத்தில், மோடிக்கு எதிராக பெரிய தலைவர் ஒருவரை காட்ட முடியாத சூழ்நிலை இருந்தது. அப்படியுமே காங்கிரஸ் கடந்த தேர்தல்களைவிட முன்னேற்றம் கண்டுள்ளது. மண்ணின் மகன் கோஷத்தாலும் மோடிக்கு ஓரளவுக்கு பலன் கிடைத்துள்ளது.

சிறுபான்மையினர் வாக்குகள்
அதேநேரம் கர்நாடகாவில் நிலை வேறு. இங்கு மோடி அபிமானிகள் கணிசமாக உள்ளபோதிலும், அவருக்கு எதிராக வலுவான முகமாக, சித்தராமையா உள்ளார். தாழ்த்தப்பட்டோர், சிறுபான்மையினர், பழங்குடியினரின் பாதுகாவலர் என்ற இமேஜ் அவருக்கு உள்ளது. இதுதவிர கன்னட மொழி பற்றை அதிகரிக்கும் செயல்பாடுகளில் அவர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.

பாஜகவுக்கு எதிரான போராட்டங்கள்
பெங்களூர் மெட்ரோ ரயில் நிலையங்களில் ஹிந்தி எழுத்துக்கள் அளிக்கப்பட்டு நடந்த போராட்டங்கள் இதற்கு நல்ல உதாரணம். திமுக தலைவர்கள் தமிழை முன்னிறுத்தி ஹிந்தி எதிர்ப்பு போராட்டங்களை ஊக்குவித்ததை போன்ற அணுகுமுறையை சித்தராமையா கடந்த ஓராண்டாக கையில் எடுத்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் தலைமை சொற்படி கேட்க வேண்டிய சூழல் இருந்தபோதிலும், இந்த விஷயத்தில் சித்தராமையா சமரசம் செய்யவில்லை.

மோடிக்கு எதிராக சித்தராமையா
கடந்த சட்டசபை தேர்தலிலேயே சித்தராமையாதான் கர்நாடகாவின் மோடி என காங்கிரஸ் பிரசாரம் செய்தது. மோடியோடு தன்னை ஒப்பிட வேண்டாம். நான் கர்நாடகாவின் சித்தராமையா என தெரிவித்தார் அவர். இதன் மூலம் தொடர்ந்து மோடிக்கு எதிரான பிம்பமாகவே வளர்ந்தவர்தான் சித்தராமையா. அவரது ஆட்சி காலத்தில், கர்நாடகாவில் பெரிய ஊழல் குற்றச்சாட்டுகள் எதுவும் வரவில்லை.

எடியூரப்பா மீது குற்றச்சாட்டு
அதேநேரம், எடியூரப்பா ஆட்சி காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளால் 3 முதல்வர்கள் மாறியது, ரிசார்ட் அரசியல் என கர்நாடக மாநிலம் அல்லோகலப்பட்டு அதன் வளர்ச்சி பாதித்தது. இப்போதும்கூட கர்நாடக பாஜகவில் எடியூரப்பாவுக்கு எதிராக கோஷ்டி அரசியல் இருக்கிறது. இதெல்லாம் காங்கிரசுக்கு பெரும் சாதகம்.

கர்நாடகாவில் நிலை வேறு
ராகுல் காந்தியை முன்னிறுத்தும் பிற மாநில தேர்தல்களில் வேண்டுமானால் பாஜக கை ஓங்கலாம். வலுவான உள் மாநில தலைவரை கொண்ட கர்நாடகாவில் அப்படி எளிதாக வெற்றி பெற்றுவிட முடியாது பாஜக. ஒருவேளை குஜராத்தில் எளிதாக பாஜக வென்றிருந்தால் அந்த அலை கர்நாடகாவிற்கு பரவியிருக்கும். ஆனால், குஜராத்தில் பாஜக தடுமாறிய தகவல், கர்நாடகாவில் காங்கிரசின் கரங்களை வலுப்படுத்தும் என தெரிகிறது. இது பாஜகவுக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications