எங்கப்பா காங்கிரஸ்? இடம் தெரியாமல் துடைத்தெறியும் பாஜக.. 5வது முறையாக மத்திய பிரதேசத்தில் ஆட்சி?
போபால்: மத்திய பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பாஜக, பெருவாரியான சீட்கள், அதாவது 140-159 சீட்களை பிடித்து ஆட்சி அமைக்கும் என இந்தியா டிவி - CNX நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. இந்தியா டிவி - சி.என்.எக்ஸ் இணைந்து நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பில் மத்திய பிரதேச மாநிலத்தில் பாஜக அறுதிப் பெரும்பான்மை பெற்று வெற்றி பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தமுள்ள 230 தொகுதிகளில் பாஜக 140-159 இடங்களை கைப்பற்றும் என்றும் காங்கிரஸ் கட்சி 70-89 இடங்களைப் பிடிக்கும் என்றும் பிற கட்சிகளுக்கு 2 சீட்டுக்கு மேல் கிடைக்க வாய்ப்பில்லை என்றும் இந்தியா டிவி - CNX நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது.
இந்தியா டிவி - CNX எக்ஸிட் போல் முடிவுகள்
பாஜக: 140-159 இடங்கள்
காங்கிரஸ்: 70-89 இடங்கள்
மற்றவை: 0-2
முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியை தக்கவைத்துக் கொள்வார் என்று இந்தியா டிவி கணிப்பு தெரிவித்துள்ளது.. அவர் ஐந்தாவது முறையாக மத்தியப் பிரதேச முதல்வராவார் என்கிறது இந்தக் கணிப்பு. ம.பி மாநிலத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 70 முதல் 89 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்தியா டிவி-சிஎன்எக்ஸ் எக்ஸிட் போல், மத்தியப் பிரதேசத்தில் பாஜகவுக்கு 46 சதவீத வாக்குகள் கிடைக்கும் என்று கணித்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சி வெறும் 38 சதவீத வாக்குகளை மட்டுமே பெறக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 தேர்தலில் காங்கிரஸ் கட்சி 40.89% வாக்குகளைப் பெற்றிருந்தது.
2018ல் காங்கிரஸ் 114 இடங்களிலும், பாஜக 109 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 2 இடங்களிலும் வெற்றி பெற்றன. பாஜகவை விட வாக்கு சதவீதம் குறைவாக இருந்தாலும் காங்கிரஸ் தனிப்பெரும் கட்சியாக இருந்தது. இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவும் என கருத்துக்கணிப்பு அமைப்புகள் சரியாக கணித்திருந்தன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள பெரும்பாலான கணிப்புகள் மத்திய பிரதேசத்தில் மீண்டும் பாஜக ஆட்சி அமையும் என்கின்றன.
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்க 116 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். மற்ற நிறுவனங்கள் நடத்தி வெளியிட்ட எக்சிட் போல் கருத்துக்கணிப்பு முடிவுகள் வருமாறு:
போல்ஸ்டார்ட் கணிப்பு
பாஜக 106-116
காங்கிரஸ் 111-121
மற்றவை 0-6
ஜன் கி பாத் கணிப்பு
காங்கிரஸ் 111-121
பாஜக 118-130
மற்றவை 5
ஆக்சிஸ் இந்தியா கணிப்பு
காங்கிரஸ் 111-121
பாஜக 118-130
மற்றவர்கள் - 5
ரிபப்ளிக் - மேட்ரிஸ் கணிப்பு
பாஜக 118-130
காங்கிரஸ் 97-107
மற்றவை 0
ஏபிசி சி வோட்டர் கணிப்பு
காங்கிரஸ் கட்சி 108-120 இடங்கள்
பாஜக 106-120 இடங்கள்
மற்றவர்கள் 0-8 இடங்கள்
டைனிக் பாஸ்கர்
காங்கிரஸ்: 105 முதல் 120 தொகுதிகள்
பாஜக 95 முதல் 115 தொகுதிகள்
மற்ற கட்சிகள் 0-15 தொகுதிகள்
People's pulse எக்சிட் போல் முடிவுகள்:
காங்கிரஸ் 117-139
பாஜக 91-113
மற்றவை 0-8
இந்தியா டுடே ஆக்சிஸ் மை இந்தியா கணிப்பு
பாஜக: 140-162
காங்கிரஸ்: 68-90
மற்றவை: 0-3
-
வீட்டு கேஸ் சிலிண்டர் 14.2 கிலோ எடையில் விநியோகம் செய்யப்படுவது ஏன் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி யாருக்கு கிடைக்கும்? நகை மதிப்பீட்டில் உள்ள ஏல ரகசியம் இதுதானா -
சிறகடிக்க ஆசை: விஜயா செய்த சதி, ஜெயிலுக்கு போகும் மொத்த குடும்பம்.. மனோஜால் ஏற்படும் விபரீதம்! ஜெயித்த ரோகிணி -
இப்போ முடியாது.. தேர்தல் முடிந்ததும் செட்டில் பண்றேன்.. கறாராக பேசிய லீமா ரோஸ்.. விக்கித்த எடப்பாடி -
சுப்மன் கில் ஆட்டத்தை பார்க்க வந்த சாரா டெண்டுல்கர்.. பாவமாக அமர்ந்திருந்த அர்ஜுன் டெண்டுல்கர் மனைவி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
எடப்பாடிக்கு அருகில் சீட்.. ஒரே விமானத்தில் பயணம்.. கடைசி நேரத்தில் பிளானை மாற்றிய உதயநிதி! -
ஸ்டாலினுக்கு இத்தகைய நடத்தை அழகல்ல.. நிர்மலா சீதாராமன் விளக்கம் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்!












Click it and Unblock the Notifications