"அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு எடுத்து செல்வோம்.." யோகி ஆதித்யநாத்
லக்னோ: அயோத்தியை வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு பாஜக எடுத்து செல்லும் என்று உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்தார். அயோத்தி மேயர் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்த யோகி இவ்வாறு கூறினார்.
உத்தர பிரதேசத்தில் நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. முதல் கட்ட தேர்தல் முடிந்த நிலையில், 2 வது கட்ட தேர்தல் வரும் 11 ஆம் தேதி நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் உள்ள 760 உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 13 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. நகர்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் அயோத்தியும் ஒன்றாகும். அயோத்தியில் பாஜக சார்பில் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள கிரிஷ் பதி திரிபாதிக்கு ஆதரவாக அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது, யோகி ஆதித்யாத் கூறியதாவது:-
அயோத்தி நம்முடையது. அயோத்தி வளர்ச்சிக்கான கூட்டு பொறுப்பு நமக்கு இருக்கிறது. வளர்ச்சியின் புதிய உச்சத்திற்கு அயோத்தியை நாங்கள் எடுத்து செல்வோம். ஒட்டு மொத்த வளர்ச்சிக்காக ஒரு வலுவான குழு அமைவது கண்டிப்பாக அமைய வேண்டும். ஏனெனில் அயோத்தியை இந்தியா மட்டும் இன்றி உலகம் முழுவதும் கவனிக்கிறார்கள்.

தற்போதைய இந்தியாவை உலகம் வேறு விதமாக பார்க்கிறது. சர்வதே நெருக்கடிகளின் போது உலகம் பிரதமர் மோடியை கவனிக்கிறது. இதுபோன்ற சூழலில், மாறி வரும் இந்தியாவுடன் நாமும் நம்மை இணைத்து செயல்பட வேண்டும். உத்தர பிரதேசம் தற்போது எங்குசென்றாலும் மதிக்கப்படுகிறது. நமது துறவிகள் எங்கு சென்றாலும் மதிக்கப்படுகிறார்கள்.
தீபோற்சவம் நிகழ்ச்சியில் 2017 முதல் அனைவரும் பங்கேற்று வருகிறோம். கடந்த ஆண்டு பிரதமர் மோடி பங்கேற்றது அந்த நிகழ்ச்சியை புதிய உச்சத்திற்கு கொண்டு சென்றது. ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் போது ஒரு கோடிக்கும் அதிகமான பக்தர்கள் வருவார்கள்" என்றார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications