குஜராத்தில் பாஜக ஆட்சி அமையும்.. ஆனால்.. இந்தியா டிவி போல் முடிவுகளில் சுவாரசியம்
டெல்லி: குஜராத்தில் பாஜக ஆட்சியை பிடிக்கும் என்று இந்தியா டிவி போல் தெரிவிக்கிறது. ஆனால், பாஜகவின் வாக்கு சதவீதம் குறைந்து வருவதை கருத்து கணிப்பு எடுத்துக் காட்டுகிறது.
குஜராத் சட்டசபைக்கு வரும் 9 மற்றும் 14ம் தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. ஆளும் பாஜக மற்றும் காங்கிரஸ் நடுவே நேரடி போட்டி இங்கு நிலவுகிறது.
இந்த நிலையில், இந்தியா டிவியும் விஎம்ஆர் அமைப்பும் இணைந்து குஜராத்தில் நடத்தியுள்ள கருத்துக் கணிப்பு முடிவுகள் இன்று இரவு வெளியாகின.

வடக்கே வாய்ப்பு
அதில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் இவைதான்: வடக்கு குஜராத்திலுள்ள 53 தொகுதிகளில், பாஜகவுக்கு 45 சதவீதம் வாக்குகள் கிடைக்க வாய்ப்புள்ளது. கடந்த 2012 சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு இங்கு் 50 சதவீத வாக்குகள் கிடைத்தன.

காங்கிரஸ் வாக்கு சதவீதம் ஏற்றம்
கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு இப்பிராந்தியத்தில் 40 சதவீத வாக்கு சதவீதம் இருந்த நிலையில் அது தற்போது 42 சதவீதமாக சிறு ஏற்றம் கண்டுள்ளது. பிறர் 13 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புள்ளதாம்.

மொத்த சீட்டுகள்
சீட்டுகளை பொறுத்தளவில் வடக்கு குஜராத்தில் பாஜக 30-34 தொகுதிகளை கைப்பற்ற வாய்ப்புள்ளது. காங்கிரசுக்கு 18-22 தொகுதிகள் கிடைக்கலாம். பிறர் 2 தொகுதிகள் வரை கைப்பற்ற வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் பாஜக இங்கு 32 தொகுதிகளையும், காங்கிரஸ் 21 தொகுதிகளையும் வென்றிருந்தது.

தெற்கிலும் பாஜக ஆதிக்கம்
அதேபோல தெற்கு குஜராத்தில் பாஜக 23 முதல் 27 தொகுதிகளையும், காங்கிரஸ் 6-10 தொகுதிகளையும், பிறர் 1-3 தொகுதிகளையும் வெல்ல வாய்ப்புள்ளது. கடந்த தேர்தலில் பாஜக இங்கு 28 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரசுக்கு 6 தொகுதிகள் கிடைத்தன.

வாக்கு வங்கி
பாஜகவுக்கு தெற்கு குஜராத்தில் இம்முறை 46 சதவீதம் வாக்குகள் கிடைக்கலாம். கடந்த தேர்தலில் அங்கு 52 சதவீத வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸ் கடந்த முறை 37 சதவீத வாக்குகளை பெற்ற நிலையில், இம்முறை 39 சதவீத வாக்குகளை பெற வாய்ப்புல்ளது. பிறர் 15 சதவீத வாக்குகளை வைத்துள்ளனராம்.

சவுராஷ்டிரா நிலைமை
சவுராஸ்டிராவில் பாஜகவுக்கு 27-31 தொகுதிகளும், காங்கிரசுக்கு 23-27 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாம். கட்ச் மண்டத்தில், பாஜகவுக்கு 27 முதல் 31 தொகுதிகளும், காங்கிரசுக்கு 23-27 தொகுதிகளும் கிடைக்க வாய்ப்புள்ளதாம்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications