ஆந்திராவில் ஜெகனுக்கு அதிர்ச்சி.. பாஜக பெரிய வெற்றி பெறும்.. காங்கிரஸ் ரொம்ப பாவம்.. பரபர சர்வே
அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களில் வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு புதிய சர்வே முடிவுகளை வெளியிட்டு இருக்கிறது.
இந்தியாவில் விரைவில் லோக்சபா தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கும் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடக்கிறது. அதைத் தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.

நமது அண்டை மாநிலமான ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சட்டசபைத் தேர்தலும் நடக்கிறது. இரண்டிற்கும் சேர்த்து வரும் மே 13ஆம் தேதி அங்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடக்கிறது.
லோக்சபா தேர்தல்: இதற்கிடையே ஆந்திராவில் லோக்சபா தேர்தலில் எந்தக் கட்சி எத்தனை இடங்களை வெல்லும் என்பது குறித்து லோக்போல் அமைப்பு நடத்திய சர்வே முடிவுகள் வெளியாகி இருக்கிறது. ஆந்திராவில் மொத்தம் 25 சீட்கள் இருக்கும் நிலையில், அதில் பாஜகவின் என்டிஏ கூட்டணி அதிகபட்ச இடங்களைக் கைப்பற்றும் எனக் கூறப்பட்டுள்ளது. அங்கு பாஜக 13-15 இடங்களில் வெல்லும் என்று லோக்போல் சர்வே கூறப்பட்டுள்ளது.
அதேநேரம் ஆந்திராவில் ஆளும் கட்சியாக இருக்கும் ஜெகன்மோகன் ரெட்டி 10 முதல் 11 இடங்களில் வெல்ல வாய்ப்பு இருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. அங்கு இந்தியா கூட்டணி 0-1 இடங்களில் மட்டுமே வெல்லும் என்று லோக்போல் அமைப்பு நடத்திய சர்வேயில் கூறப்பட்டுள்ளது.
யாருக்கு எவ்வளவு: ஆந்திர மாநிலத்தைப் பொறுத்தவரைக் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிகப் பெரிய வெற்றி கிடைத்தது. மொத்தம் இருக்கும் 25 இடங்களில் 22இல் வென்று ஜெகன் மோகன் ரெட்டி அனைவருக்கும் ஷாக் கொடுத்தார். சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சியால் வெறும் 3 இடங்களில் மட்டுமே வென்றது.
ஆனால், இப்போது 5 ஆண்டுகளில் அங்கே நிலைமை மொத்தமாக மாறிவிட்டது. பாஜகவின் என்டிஏ கூட்டணியில் தெலுங்கு தேசம் இணைந்துள்ள நிலையில், அவர்கள் தான் அதிகபட்ச இடங்களைப் பெறுவார்கள் என்று லோக்போல் அமைப்பு தனது சர்வேயில் கூறியிருக்கிறது. அதேநேரம் கடந்த முறை 22 இடங்களை அள்ளிய ஜெகன் கட்சிக்கு வெறும் 10 -11 இடங்கள் மட்டுமே கிடைக்கும் என்று கூறப்பட்டு இருக்கிறது.
ஆந்திரா: ஆந்திராவில் இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது. அங்கே ஜெகன் கட்சி அனைத்து தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுகிறது. சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளார். தெலுங்கு தேசம்17 இடங்களில் போட்டியிடும் நிலையில், பாஜக 6 சீட்களிலும், ஜனசேனா 2 இடங்களிலும் போட்டியிடுகிறது. இந்தியா கூட்டணி சார்பில் காங்கிரஸ் மற்றும் இடதுசாரிகள் இணைந்து போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.
-
உடனே சென்னை வாங்க.. அவசர அவசரமாக ஹெலிகாப்டரில் விரையும் அண்ணாமலை.. பாஜக போட்ட உத்தரவின் பின்னணி -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
காங்கிரஸ் VS பாஜக.. தமிழகத்தில் எந்தெந்த தொகுதிகளில் ‘கை' - ‘தாமரை' நேரடி மோதல்.. வெல்வது யாரு? -
அடித்து தூக்கும் மம்தா.. அதிர்ச்சியில் பாஜக! மேற்கு வங்கத்தில் மீண்டும் திரிணாமுல் தான்! புதிய சர்வே -
பாஜகவில் இணைந்தார் முன்னாள் டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ்! மேற்கு வங்க தேர்தலில் போட்டியிட வாய்ப்பு -
கோவை வடக்கு தொகுதியில் பாஜக கதை குளோஸ்.. சத்தமே இல்லாமல் வேலை பார்க்கும் வேலுமணி ஆதரவாளர் -
புதுச்சேரி குறித்து பக்கம் பக்கமாக புகார்.. தமிழக அரசியல் குறித்து கப்சிப்.. அண்ணாமலைக்கு வந்த சோதனை -
"தமிழகத்தில் முஸ்லீம்களுக்கு தான் ஓபிசி இட ஒதுக்கீடு கிடைக்கிறது.." பாஜக எம்பி குற்றச்சாட்டு -
கோவையில் இருந்து கொண்டே மோடியை வரவேற்க செல்லாத அண்ணாமலை.. லிஸ்டில் இருந்தும் புறக்கணித்து எதிர்ப்பு -
பாஜக ‘டிக்’ அடித்த வேட்பாளர்கள் யார்? நாளை வெளியாகும் வேட்பாளர் பட்டியல்! சென்னை வரும் டெல்லி புள்ளி -
கட்டம் சரியில்லை.. எலக்சனே வேண்டாம்! அண்ணாமலையை அலர்ட் செய்த நாடி ஜோசியர்! இது தான் உண்மை காரணமா? -
போட்டியிடட்டுமே.. செந்தில் பாலாஜி குறித்த கேள்வியால் சட்டென கடுப்பான நயினார் நாகேந்திரன்











Click it and Unblock the Notifications