8 மாநில சட்டப்பேரவை இடைத் தேர்தல் முடிவுகள்... 5-ல் பாஜக, 3-ல் காங்கிரஸ் வெற்றி!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: 8 மாநிலங்களில் 10 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்களில் 5-ல் பாஜகவும், 3-ல் காங்கிரஸ் கட்சியும் வெற்றி பெற்றுள்ளது. டெல்லியில் கெஜ்ரிவால் கட்சி டெபாசிட் இழந்தது.

கர்நாடகம், மத்தியப் பிரதேசம் ஆகிய இரு மாநிலங்களில் தலா 2 தொகுதிகள், மேற்கு வங்காளம், அசாம், ராஜஸ்தான், இமாசலபிரதேசம், டெல்லி, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் தலா ஒரு தொகுதி என மொத்தம் 10 சட்டசபை இடங்களுக்கு கடந்த 9-ந் தேதி இடைத்தேர்தல் நடந்தது.

அதில் பதிவான ஓட்டுகள் நேற்று எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பா.ஜனதா 5 இடங்களிலும், காங்கிரஸ் 3 இடங்களிலும், திரிணாமுல் காங்கிரஸ், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சிகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

பா.ஜனதாவுக்கு 5 இடங்கள்

பா.ஜனதாவுக்கு 5 இடங்கள்

மத்திய பிரதேச மாநிலம், பந்தவ்கார் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர், தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை விட 25 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டுகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றார்.

இமாசலபிரதேச மாநிலம், போரஞ்ச் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளரை விட 8 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

டெபாசிட் காலி

டெபாசிட் காலி

கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிற டெல்லியில் ரஜவுரி கார்டன் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர், தனக்கு அடுத்தபடியாக வந்த காங்கிரஸ் வேட்பாளரை விட கூடுதலாக சுமார் 15 ஆயிரம் ஓட்டுகள் பெற்று வெற்றி பெற்றார். இங்கு ஆளும் ஆம் ஆத்மி கட்சி 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டு, டெபாசிட்டை பறி கொடுத்தது.

ராஜஸ்தான் மாநிலம், தோல்பூர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளரை சுமார் 38 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றார்.

அசாம் மாநிலத்தில், தேமாஜி தொகுதியில் பா.ஜனதா வேட்பாளர், காங்கிரஸ் வேட்பாளரை விட சுமார் 10 ஆயிரம் ஓட்டுகள் கூடுதலாக வாங்கி வெற்றி பெற்றார்.

காங்கிரசுக்கு 3 இடங்கள்

காங்கிரசுக்கு 3 இடங்கள்

கர்நாடக மாநிலத்தில் நஞ்ஜன்குட், குண்ட்லுபேட்டை தொகுதிகளில் நடந்த இடைத்தேர்தலில் ஆளும் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றிருக்கிறது.

நஞ்ஜன்குட் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜனதா வேட்பாளரை 21 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். குண்ட்லுபேட்டை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர், தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜனதா வேட்பாளரை விட கூடுதலாக 10 ஆயிரத்துக்கும் அதிகமான வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மத்திய பிரதேச மாநிலம், அட்டர் தொகுதியில் பா.ஜனதா வேட்பாளரை விட காங்கிரஸ் வேட்பாளர் 857 ஓட்டுகள் அதிகம் பெற்று, வெற்றி பெற்றார்.

மேற்கு வங்காளம்–ஜார்கண்ட்

மேற்கு வங்காளம்–ஜார்கண்ட்

மேற்குவங்காள மாநிலம், கொண்டாய் தெற்கு தொகுதியில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர், பா.ஜனதா வேட்பாளரை 42 ஆயிரத்துக்கும் அதிகமான ஓட்டு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

ஜார்கண்ட் மாநிலத்தில் லிட்டிபாரா தொகுதியில் நடந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்திமோச்சா கட்சி வேட்பாளர், தனக்கு அடுத்தபடியாக வந்த பா.ஜனதா வேட்பாளரை சுமார் 13 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+