சுத்தம்! காங்கிரஸை துடைத்தெறிந்த பாஜக.. ம.பியில் கடைசி 5 தேர்தல்களின் ரிப்போர்ட் கார்டு!
போபால்: மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியை துடைத்து எறிந்துள்ளது பாஜக. கடந்த தேர்தலைக் காட்டிலும் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது காங்கிரஸ். கடந்த 5 தேர்தல்களில் பாஜக - காங்கிரஸ் கட்சிகளின் பெர்ஃபார்மென்ஸ் ரிப்போர்ட்டை பார்க்கலாம்.
மத்திய பிரதேசத்தில், 1990ல் நடந்த தேர்தலில் பெரும் எண்ணிக்கையில் இடங்களைப் பிடித்த பாஜக, முதல் முறையாக ஆட்சியைப் பிடித்தது. சுந்தர்லால் பட்வா முதல்வரானார். மூன்று ஆண்டுகள் கடந்த நிலையில், பாபர் மசூதி இடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக ஆட்சி செய்த மாநிலங்களில் எல்லாம் ஆட்சி கலைக்கப்பட்டபோது இந்த ஆட்சியும் கலைக்கப்பட்டது. அதன் பிறகு, 1993ல் மீண்டும் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. தொடர்ந்து, 10 ஆண்டுகள் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்றது.

2003 தேர்தல்: இத்தேர்தலில் பா.ஜ.க மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. சத்தீஸ்கர் மாநிலம் ம.பி.யில் இருந்து பிரிக்கப்பட்ட பிறகு முதல் முறையாக திக்விஜய் சிங் தலைமையிலான 10 ஆண்டுகால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்தது. பா.ஜ.க 230 இடங்களில் போட்டியிட்டு 173 இடங்களில் வெற்றி பெற்றது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் முறையே 38, 7 மற்றும் 2 இடங்களில் வெற்றி பெற்றன. உமாபாரதி முதல்வரானார். பின்னர் சில காலம் பாபுலால் கௌர், அதன் பிறகு சிவராஜ் சிங் சௌகான் ஆகியோர் முதலமைச்சர்களாக இருந்தனர்.
2008 தேர்தல்: காங்கிரஸ் கட்சி 2003ல் பெரும் தோல்வியைச் சந்தித்திருந்த நிலையில், அடுத்த தேர்தலில் 33 இடங்களை மீட்டெடுத்தது. பாஜக 143 இடங்களிலும் காங்கிரஸ் கட்சி 71 இடங்களிலும் வென்றன. பாஜக பெற்ற சீட் எண்ணிக்கையில் சரிவு ஏற்பட்டாலும், பெரும்பான்மையுடன் மீண்டும் சிவராஜ் சவுகான் ஆட்சி அமைந்தது.
2013 தேர்தல்: 2013ல் நடந்த மத்திய பிரதேச சட்டசபை தேர்தலில் பா.ஜ.க 165 இடங்களிலும், காங்கிரஸ் 58 இடங்களிலும், பகுஜன் சமாஜ் கட்சி 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இந்த தேர்தலில் முன்பை விட காங்கிரஸ் சரிவைக் கண்டது. மத்திய பிரதேச முதலமைச்சராக 3வது முறையாகப் பொறுப்பு வகித்தார் சவுகான்.
2018 தேர்தல்: கடந்த 2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், யாருக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. 114 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் 109 இடங்களில் பாஜகவும் வெற்றி பெற்றன. எனினும், பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏக்களின் ஆதரவுடன் கமல்நாத் முதலமைச்சர் ஆனார். ஆனால், முதலமைச்சர் பதவியை பெறுவதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கமல் நாத், இளம் தலைவரான ஜோதிராதித்ய சிந்தியா ஆகியோருக்கிடையே தொடர் போட்டி நிலவி வந்தது.
கமல் நாத்துக்கு முதலமைச்சர் பதவி வழங்கப்பட்டதால் சிந்தியா அதிருப்தியில் இருந்து வந்தார். இறுதியில், சொந்த கட்சிக்கு எதிராக போர்க்கோடி தூக்கிய சிந்தியா, தன்னுடைய ஆதரவு எம்எல்ஏக்களுடன் பாஜகவில் இணைந்தார். இதனால், ஆட்சி அமைத்த 15 மாதங்களில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்தது. பாஜகவின் சிவராஜ் சிங் சவுகான் மீண்டும் முதலமைச்சராக பதவியேற்று, ஆட்சி நடத்தி வருகிறார்.
2023 ரிசல்ட்: இந்நிலையில், மொத்தமுள்ள 230 இடங்களில் 116 சீட் வென்றால் ஆட்சி என்ற சூழலில் தற்போதைய ரிசல்ட், பாஜகவை மீண்டும் அரியணையில் அமர்த்தியுள்ளது. தற்போதைய நிலவரப்படி, 161 இடங்களில் பாஜகவும், 66 இடங்களில் காங்கிரஸ் கட்சியும் முன்னிலை வகிக்கின்றன. கடந்த தேர்தலை விட 40 தொகுதிகளுக்கும் மேல் அதிகம் வெற்றி பெற உள்ளது பாஜக.
2018ல் காங்கிரஸ்: 114, பாஜக 109
2023ல் தற்போதைய ட்ரெண்ட்படி, பாஜக 161, காங்கிரஸ் 66.
ஆக, காங்கிரஸ் கடந்த தேர்தலை விட சுமார் 50+ தொகுதிகளை இழப்பது உறுதியாகியுள்ளது. கடந்த 2003 முதல் 20 ஆண்டுகளில் காங்கிரஸ் கட்சி 15 மாதங்கள் மட்டுமே ஆட்சி செய்துள்ளது. இந்நிலையில், மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெற்று, மத்திய பிரதேசத்தில் இருந்து காங்கிரஸை துடைத்தெறிந்துள்ளது. மத்திய பிரதேசத்தைக் கைப்பற்றி, பாஜகவுக்கு தண்ணி காட்ட முயன்ற காங்கிரஸ், தற்போது பாஜகவிடம் சரண்டர் ஆகியுள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications