Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மதச்சார்பற்ற தன்மையை மோடி அரசு பாதுகாக்க வேண்டும்: வைகோ

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மாநிலங்களுக்கு உரிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்குகின்ற கூட்டாட்சி கொள்கைக்கு மோடி அரசு உத்தரவாதம் தரும் என நம்புகிறேன். அனைத்து சமயங்களையும் சமமாக மதித்து நடத்துகின்ற மதச்சார்பற்ற தன்மையை மோடி அரசு பாதுகாக்க வேண்டும் என வைகோ கேட்டுக்கொண்டுள்ளார்.

BJP would score 272 seats on its own says Vaiko

டெல்லியில் தல்கோட்ரா உள்விளையாட்டு அரங்கத்தில், நேற்று (14.03.2014) வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி அவர்கள் தலைமையில், நரேந்திர மோடிக்காக வழக்கறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் வழக்கறிஞர்கள் பங்கேற்றனர். இவர்களில் பெரும்பாலோர் உச்ச நீதிமன்றத்திலும், உயர் நீதிமன்றங்களிலும் வாதாடும் வழக்கறிஞர்கள் ஆவர்.

விளையாட்டு அரங்கத்துக்கு உள்ளேயும், வெளியேயும் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் திரண்டிருந்தனர். இந்த மாநாட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியதாவது:

"இந்திய வழக்கறிஞர்கள் துறைக்கே ஒளிரும் பெருமை தரும் ராம் ஜெத்மலானி அவர்களே, நாளைய பிரதமர் மாண்புமிகு நரேந்திர மோடி அவர்களே, மதிப்புக்குரிய வழக்கறிஞர்களே வணக்கம்.

இங்கு நடைபெறும் வழக்கறிஞர்கள் மாநாடு இந்தியாவின் அரசியல் வரலாற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வாக இடம்பெறும். இம்மகத்தான மாநாட்டில் உரையாற்றுகின்ற உன்னதமான வாய்ப்பை எனக்கு வழங்கிய ராம் ஜெத்மலானி அவர்களுக்கு எனது உளம் நிறைந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

நீதிக்காக வாதாடும் வழக்கறிஞர்கள், மனித உரிமைகளுக்காக, நாதியற்றவர்களுக்காக, ஜனநாயகத்துக்காக, ஊழலற்ற அரசு அமைவதற்காக வாதாடும் வழக்கறிஞர்கள், நரேந்திர மோடிக்கு ஆதரவுக் குரல் தந்திட திரண்டிருக்கிறீர்கள். நாடு முழுவதும் நரேந்திர மோடி அலை வீசுகிறது. அலைகள் எழும் கன்னியாகுமரியில் இருந்து, பனி படர்ந்த இமயமலை வரை குக்கிராமத்தில், பட்டிக்காட்டில், பட்டணத்தில் அனைத்து வீடுகளிலும் உச்சரிக்கும் பெயராக மோடியின் பெயர் ஆகிவிட்டது.

புகழால் உயர்ந்த சிகரங்களை ஒருவர் அடைய வேண்டுமெனில், ‘சகாக்கள் தூங்கும்போதும், கண் விழித்துக் கடுமையாக உழைப்பதனால் மட்டுமே உயர முடியும்' என்று கவிஞர் லாங் பெல்லோ பாடினார்.

நரேந்திர மோடி இத்தகைய கீர்த்தியை அடைந்ததற்கு அவரது கடுமையான உழைப்பும், மக்களுக்காக செய்த அர்ப்பணிப்புச் சேவையும், அஞ்சாத துணிச்சலும், பொதுவாழ்வில் எவறும் குற்றம் சொல்ல இயலாத நேர்மையுமே காரணம் ஆகும்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் இதுவரை சுதந்திர இந்தியாவில் ஏற்படாத முடிவுகளாக நம் கதவைத் தட்ட காத்திருக்கின்றன. ஊழல் மயமாகிவிட்ட ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை நடத்தும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையப்போகிறது. அக்கட்சிக்கு இந்தியா முழுவதும் இரட்டை இலக்க வெற்றிதான் கிடைக்கும். நூறு இடங்களை நெருங்க முடியாது. ஆனால் நரேந்திர மோடிக்கு மக்களிடம் உள்ள செல்வாக்கினால், பாரதிய ஜனதா கட்சிக்கு மட்டுமே ஆட்சி அமைக்கத் தேவையான 272 இடங்களுக்கும் அதிகமான வெற்றி கிடைக்கும்.

மறுமலர்ச்சி பெறுகிற இந்தியாவாக, புதிய விடியல் காணும் இந்தியாவாக, நரேந்திர மோடி அமைக்கின்ற அரசு வார்ப்பிக்கும் என நம்புகிறேன். மாநிலங்களுக்கு உரிய உரிமைகளையும், அதிகாரங்களையும் வழங்குகின்ற கூட்டாட்சி கொள்கைக்கு மோடி அரசு உத்தரவாதம் தர வேண்டுகிறேன். தரும் என நம்புகிறேன். அனைத்து சமயங்களையும் சமமாக மதித்து நடத்துகின்ற மதச்சார்பற்ற தன்மையை மோடி அரசு பாதுகாக்க வேண்டும் எனக் கோருகிறேன். பாதுகாக்கும் என நம்புகிறேன். அமையப் போகும் மோடி அரசு, நாட்டில் சமூக நீதியை நிலைநாட்ட வேண்டுகிறேன்.

தமிழ் நாட்டு மக்களைப் பொறுத்தமட்டில், காங்கிரஸ் கட்சியை ஒருபோதும் மன்னிக்க மாட்டோம். இலங்கை தீவில் இலட்சக் கணக்கான தமிழர்களை, சிங்கள ராஜபக்சே அரசு இனப்படுகொலை செய்வதற்கு ஆயுதங்களைத் தந்து, அனைத்து உதவிகளையும் செய்த ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை, அதற்குத் தலைமையேற்ற காங்கிரஸ் கட்சியை தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.

அடல் பிஹாரி வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது, ‘இலங்கை தீவில் உள்ள ஈழத் தமிழர்களுக்கு எதிராக சிங்கள அரசுக்கு இந்திய அரசு எந்த உதவியும் செய்யாது, ஆயுதங்களையும் விற்காது' என்று அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பிரகடனம் செய்தார். நாளை மலரப் போகின்ற நரேந்திர மோடி அரசு, ஈழத் தமிழர் பிரச்சினையில் வாஜ்பாய் அவர்களின் அணுகுமுறையை பின்பற்ற வேண்டுகிறேன்.

நரேந்திர மோடிக்கு வெற்றி! தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வெற்றி! அதை அடைவதே நமது இலக்கு!" என்றார் வைகோ.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+