Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தட்டிதூக்கிய "மேலிடம்".. பாஜகவில் இணைந்தார் ஹர்திக் படேல்.. புதிய அத்தியாயம் ஆரம்பம்.. குஜராத் குஷி

ஹர்திக் படேல் இன்று பாஜகவில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது

Subscribe to Oneindia Tamil

காந்திநகர்: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய ஹர்திக் படேல், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.. இவர் பாஜகவில் சேர்ந்துள்ளது, காங்கிரசுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டு வருகிறது.

Recommended Video

    BJP-ல் இணையும் Hardik Patel.. Gujarat-ல் Congress-க்கு மேலும் பின்னடைவு #Politics

    கடந்த 2015ம் ஆண்டு, பட்டேல் சமூகத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டம் நடைபெற்றது.. இந்த போராட்டத்தில், தேசம் முழுவதும் அதிக கவனத்தை ஈர்த்தவர் ஹர்திக் படேல்.

    இப்படிப்பட்ட தீவிரமான நபரை, கைநழுவி விட்டுவிடக்கூடாது என்று கணக்கு போட்ட காங்கிரஸ், 2019ல், இவரை கட்சிக்குள் சேர்த்து கொண்டது.. அத்துடன், குஜராத் மாநில காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவராகவும் இவருக்கு பொறுப்பு வழங்கியது.

     ஹர்திக் படேல்

    ஹர்திக் படேல்

    இதற்கு பிறகு, குஜராத் மாநிலத்தில் 2019 எம்பி தேர்தலில் சுற்றி சுழன்று வேலை பார்த்தார் ஹர்திக் பட்டேல்.. ஆனாலும், சில வருடங்களாகவே காங்கிரஸ் கட்சியின் குஜராத் தலைவர்கள் தன்னை ஓரங்கட்ட நினைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார்.. மேலும், கட்சி தலைமை தன்னுடைய குறைகளை தீர்த்து வைக்கும் என தான் நம்புவதாகவும் சொல்லி கொண்டே வந்தார்.. ஆனால், குஜராத் காங்கிரசில் உட்கட்சி பூசல் அதிகரித்து வரவும், ஹர்திக்கின் புலம்பல்கள் காங்கிரஸ் காதில் விழவே இல்லை.

    ராஜினாமா

    ராஜினாமா

    இதனால் வெறுத்துபோனார் ஹர்திக் படேல்.. கட்சியின் தலைமையாலும் தான் ஓரங்கட்டப்பட்டதாக கூறி, குஜராத் மாநிலத்தின் செயல் தலைவர் பொறுப்பிலிருந்தும் விலகுவதாக அறிவித்தார்... இதையடுத்து, பாஜக அல்லது ஆம் ஆத்மி இந்த 2 கட்சியில், எந்த கட்சியில் சேருவார் என்று எதிர்பார்ப்பு நிலவியது.. இறுதியில் பாஜகவில் இணைவதாக தகவல் வெளியானது.. இதற்கு காரணம் சமீபகாலமாகவே பாஜகவை தாறுமாறாக புகழ ஆரம்பித்தார் ஹர்திக்.

     குஜராத் கணக்கு

    குஜராத் கணக்கு

    அதுமட்டுமல்ல, அத்துடன், குஜராத் மாநிலத்தின் எதிர்கால வளர்ச்சிக்கும், மத்திய அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு காங்கிரஸ் முட்டுக் கட்டையாக இருக்கிறது என்று ஒரே போடாக போட்டிருந்தார்.அந்த வகையில், இன்றையதினம் அதாவது ஜுன் 2ம் தேதி குஜராத் மாநில பாஜக அலுவலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்க கூடிய விழாவில் ஹர்திக் கட்சியில் இணைவார் என்று அம்மாநில பாஜக தலைவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்..

     இணைகிறார்

    இணைகிறார்

    அந்த வகையில், இன்று ஹர்திக் பாஜகவில் இணைந்துவிட்டார்.. "இன்று முதல் புதிய அத்தியாயத்தை தொடங்கப்போவதாகவும், பிரதமர் மோடியின் கீழ் நாட்டுக்காக உழைப்பேன், பிரதமர் மோடி ஒட்டுமொத்த உலகத்திற்கே பெருமை " என்று இன்று காலையிலேயே ஹர்திக் ட்விட் போட்டு, அவரது இணைப்பை உறுதி செய்திருந்தார்.. ஹர்திக்கை கட்சியில் சேர்த்து கொள்வதற்கு பாஜகவும் ஒரு கணக்கை போட்டு வைத்துள்ளது.. விரைவில் குஜராத்தில் தேர்தல் வர போகிறது.. இதற்கு ஹர்திக் உறுதுணையாக இருப்பார் என்று பாஜக நம்புகிறது..

     தகர்ந்த கனவு

    தகர்ந்த கனவு


    இது காங்கிரசுக்கு மீள முடியாத அதிர்ச்சியையே ஏற்படுத்தி வருகிறது... காரணம், பாஜகவின் கோட்டையாக இருக்கும் குரஜாத்தை, ஹர்திக்கை வைத்து பிடித்துவிடலாம் என்று கணக்கு போட்டிருந்தது.. ஆனாலும் ஹர்திக்கை தற்போது தெரிந்தே நழுவவிட்டுள்ளது. ஹர்திக் பாஜகவில் இணைந்திருப்பதன் மூலம் படேல் சமூகத்தினர் வாக்கு வங்கி பாஜகவுக்கு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது...!

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+