பெரிய சேலஞ்ச்.. பாஜக சமாளிக்குமா? சவாலை முறியடிக்குமா? மிசோர மாநில முதல்வராக லால்துஹோமா பதவியேற்றார்

Subscribe to Oneindia Tamil

ஐஸ்வால்: ஐஸ்வால்: மிசோரம் முதல்வராக சோரம் மக்கள் இயக்கத் தலைவர் லால்துஹோமா பதவியேற்றார். மாநில ஆளுநர் ஹரி பாபு கம்பம்பட்டி அவருக்கு பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்ப பிரமாணமும் செய்து வைத்தார்..

வடகிழக்கு மாநிலமான மிசோரமில் ஏற்கெனவே ஆட்சியில் இருந்த மிசோ தேசிய முன்னணியை வீழ்த்தி, மற்றொரு பிராந்திய கட்சியான ஜோரம் மக்கள் இயக்கம் ஆட்சியைக் கைப்பற்றியது.

BJPs Success in Mizoram Lalduhoma will take charge as Mizoram chief minister today

இந்த கட்சி மொத்தம் 27 தொகுதிகளில் வெற்றி பெற்றது. மிசோ தேசிய முன்னணிக்கு 10 இடங்கள் கிடைத்தன. ஆனால், பாஜகவோ, 2 இடங்களை மட்டுமே கைப்பற்றிய நிலையில், காங்கிரசுக்கு ஒரு இடம் மட்டுமே கிடைத்தது...

தேர்தல்: மிசோரம் தேர்தலை பொறுத்தவரை, பாஜகவுக்கு எப்படியும் தோல்விதான் என்று அரசியல் வியூகர்கள் சொல்லி வந்தார்கள்.. அதற்கேற்றவாறு, தேர்தல் கணிப்புகளும், பாஜகவுக்கு சாதகமான எந்த கணிப்பையும் சொல்லவில்லை.

காரணம், மிசோரத்தில் பெரும்பாலும் கிறிஸ்தவர்கள் வசிக்கிறார்கள்.. சிறுபான்மையினர் ஆதரவு எப்படி பாஜகவுக்கு கிடைக்கும்? என்பதால், பாஜகவுக்கான சாதகமான முடிவை எந்த கணிப்புகளுமே வெளியிடவில்லை..

இன்னும் சொல்லப்போனால், தொங்கு சட்டசபைதான் அமைய வாய்ப்புள்ளதால், காங்கிரசுக்கே நிறைய சான்ஸ் இருப்பதாகவும் சொன்னார்கள். ஆனால், ஒரு சீட் லீடிங்கில் வைத்து, காங்கிரஸை முந்திவிட்டது பாஜக. எனினும் வாக்கு வங்கி என்னவோ, முன்பைவிட குறைவாகவே கிடைத்துள்ளது. அந்தவகையில், கிறிஸ்தவ எதிர்ப்பை, பாஜக இன்னமும் தக்கவைத்துள்ளது இங்கு கவனிக்கத்தக்கது.

முதல்வர்: இந்நிலையில், ஜோரம் மக்கள் இயக்கம் கட்சியின் புதிய எம்எல்ஏக்கள் அனைவரும், நேற்று முன்தினம் ஆலோசனை கூட்டம் நடத்தினார்கள்.. இதில் முதல்வராக, கட்சித்தலைவா் லால்டுஹோமா தோ்வு செய்யப்பட்டாா்... இதைத் தொடா்ந்து, மாநில கவர்னர் ஹரி பாபுவை நேற்று சந்தித்த லால்டுஹோமா, ஆட்சியமைக்கவும் உரிமை கோரினாா்.

இந்த நிலையில், மாநில முதல்வராக லால்துஹோமா இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்க போவதாக, கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.. லால்துஹோமாவுக்கு 74 வயதாகிறது.. இவர் ஒரு முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி ஆவாா். முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் பாதுகாப்பு பொறுப்பு அதிகாரியாகவும் இவா் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதவியேற்பு: எதிர்பார்த்தபடியே, இன்று பதவியேற்று கொண்டார் லால்துஹோமா.. ஆளுநர் மாளிகையில், ஆளுநர் ஹரிபாபு கம்பம்பட்டி லால்துஹோமாவுக்கு பதவியேற்பு பிரமாணமும், ரகசிய காப்ப பிரமாணமும் செய்து வைத்தார்.. மேலும் 11 மக்கள் இயக்கத்தின் தலைவர்களும் அமைச்சர்களாக பதவியேற்கின்றனர்.

சமாளிப்பாரா? இந்த பதவியேற்பு விழாவில் மிசோரம் தேசிய முன்னணி தலைவரும், முதல்வருமான ஜோரம் தங்கா கலந்து கொண்டதுடன், எம்எல்ஏக்கள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் லல்சந்தமா ரால்டே, மற்றும் முன்னாள் முதல்வர் லால் தன்ஹாவ்லா போன்றோரும் பங்கேற்றுள்ளனர்.. புதிய அரசு பொறுப்பேற்றிருந்தாலும், சிறுபான்மையினர் வாக்குகளை பாஜக பெறுமா? காங்கிரஸ் தனக்கான வாக்கு சதவீதத்தை உயர்த்துமா? மாநிலத்தில் நிலவும் சவால்களை லால்துஹோமா சமாளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு அதிகமாகவே ஏற்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+