அமித்ஷாவே ஆந்திராவை விட்டு வெளியேறு! திருப்பதியில் தெலுங்குதேசம் கருப்புக் கொடி போராட்டம்!!
Recommended Video

திருப்பதி : திருப்பதி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய வந்த பாஜக தலைவர் அமித்ஷாவுக்கு எதிராக தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புக்கொடி ஏந்தி போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பாஜக தலைவர் அமித்ஷா ஆந்திர மாநிலம் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய இன்று காலை வந்தார். சாமி தரிசனம் முடித்துவிட்டு விமானம் நிலையம் செல்லும் வழியில் அவர் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பதி அலிபிரி சோதனைச் சாவடி அருகே வந்த அமித்ஷாவின் காரை மறித்து, தெலுங்கு தேசம் கட்சியினர் கருப்புக்கொடி காட்டினர். மேலும், ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க தொடர்ந்து மறுத்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும் அவர்கள் கோஷம் எழுப்பினர்.
ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பெற்றுத் தருவதாகக் கூறி மோடி மற்றும் பாஜக தலைவர்கள் ஆந்திர மக்களை ஏமாற்றி விட்டதாகவும், உடனடியாக அமித்ஷா ஆந்திராவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதனையடுத்து இரு கட்சித் தொண்டர்களுக்கும் அங்கு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் பாஜக நிர்வாகி ஒருவரின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டதால், அங்கு கலவரம் ஏற்படும் சூழல் உருவானதை அடுத்து அப்பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர்.
அமித்ஷாவின் கார் அனுப்பிவைக்கப்பட்ட நிலையில், அங்கு தொடர்ந்து தெலுங்கு தேசம் மற்றும் பாஜக கட்சித் தொண்டர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications