கருப்பு பணம் பதுக்கலில் 'ஏழை நாடான' இந்தியாவுக்கு 16வது இடமாம்!
டெல்லி: ஸ்விஸ் வங்கியில் கருப்பு பணம் பதுக்கியதில் 'ஏழை நாடான' இந்தியாவுக்கு 16 வது இடம் கிடைத்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது.
ஸ்விஸ் வங்கியில் பணம் பதுங்கிய 628 இந்தியர்கள் பெயர்கள் ஏற்கனவே லீக் ஆகியிருந்த நிலையில், மொத்தமுள்ள 1195 இந்தியர்கள் பெயரும் இன்று லீக் ஆகியது.
மொத்தம் 200 நாடுகளை சேர்ந்தவர்கள் சுவிட்சர்லாந்தில், கருப்பு பணம் பதுக்கி வைத்துள்ள நிலையில், இவர்கள் பதுக்கியுள்ள பண மதிப்பின் அடிப்படையில், கருப்பு பண சேமிப்பில் இந்தியாவுக்கு 16வது இடம் கிடைத்துள்ளது.

கருப்பு பணம் வைத்துள்ளோருக்கான முதலிடத்தை சுவிட்சர்லாந்துதான் பெற்றுள்ளது. அந்த நாட்டை சேர்ந்தவர்கள் 31.2 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு கருப்பு பணத்தை பதுக்கியுள்ளனர்.
2வது இடம் ஒருங்கிணைந்த ஐரோப்பாவுக்கு. 21.7 பில்லியன் டாலர் மதிப்புக்கு அந்த நாட்டவர்கள் கருப்பு பணம் பதுக்கியுள்ளனர்.
இந்த பட்டியலில் வெனிசுலா 14.8 பில்லியன் டாலர் பணத்துடன் 3வது இடத்திலுள்ளது. 13.4 பில்லியன் டாலர்களுடன் அமெரிக்கா நான்காவது இடத்திலும், 12.5 பில்லியன் டாலர்களுடன் பிரான்ஸ் 5வது இடத்திலும் உள்ளது.
4.1 பில்லியன் டாலர் மதிப்புள்ள பணத்துடன் இந்தியா இந்த பட்டியலில் 16வது இடத்திலுள்ளது. மொத்தம் 1195 இந்தியர்கள், 1668 அக்கவுண்டுகளை வைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது சில இந்தியர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட அக்கவுண்டுகளை வைத்துள்ளனர்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications