ஆபாச வெப்சைட்களை முடக்க முடியாது: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: ஆபாச இணையதளங்களை முடக்கினால், மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவல்களும் முடக்கப்பட்டு விடும். இதனால், இவற்றை மக்கள் படித்து தெரிந்து கொள்ள முடியாத வகையில் பெரும் தீங்கு ஏற்படும்‘ என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
ஆபாச இணைய முடக்கக் கோரியும், ஆபாச படம் பார்ப்பவர்களை தண்டிக்க கோரியும் மத்தியப் பிரதேசம் இந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் கமலேஷ் வஸ்வானி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அதில், ‘இந்தியாவில் ஆபாச படம் பார்ப்பது குற்றம் அல்ல. பெண்களுக்கு எதிரான பாலியியல் குற்றங்களுக்கு ஆபாச வெப்சைட்கள்தான் முக்கிய காரணமாக இருக்கின்றன. இன்டர்நெட்டை ஒழுங்குப்படுத்த சட்டங்கள் இல்லை. இதனால் இன்டர்நெட்டில் 20 கோடி ஆபாச வீடியோக்கள் இலவசமாக கிடைக்கின்றன.
இன்டர்நெட்டில் ஆபாச படங்களை சிறுவர்களும் பார்க்கும் நிலை இருக்கிறது. இதனால் ஒட்டுமொத்த சமுதாயமும் சீர்கெடும் அபாயம் உள்ளது. ஆபாச படங்களை பார்ப்பதால் ஏற்படும் தூண்டுதலால்தான் பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடக்கின்றன‘ என கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.எஸ்.சவுகான் தலைமையிலான பெஞ்ச் மத்திய தொலை தொடர்பு துறை பதில் அளிக்க உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து மத்திய அரசு சார்பில் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.வி.விஸ்வநாதன் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், ‘ஆபாச இணையதளம் என்று அனைத்தையும் முடக்கினால், மருத்துவம் தொடர்பான பல்வேறு தகவல்களும் முடக்கப்பட்டு விடும். இதனால், இவற்றை மக்கள் படித்து தெரிந்து கொள்ள முடியாத வகையில் பெரும் தீங்கு ஏற்படும்‘ என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மேலும், ஆபாச வெப்சைட்களை முடக்கும் சாப்ட்வேரை கம்ப்யூட்டரில் நிறுவிய பின்னரே விற்பனைக்கு அனுப்ப வேண்டுமென கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவிடலாம் எனவும் மத்திய அரசு பரிந்துரை செய்துள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications