ஏமன் விமானத் தாக்குதலில் சிக்கிப் பலியான 7 இந்தியரில் 6 பேரின் உடல்கள் மீட்பு!
டெல்லி: ஏமனில் சவுதி கூட்டுப்படை நடத்திய விமான தாக்குதலில் காணாமல் போனதாகக் கூறப்பட்ட 7 இந்தியர்களில் 6 பேரின் உடல்கள் கிடைத்துள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஏமன் நாட்டில், ஈரான் ஆதரவு பெற்ற ‘கவுதிஸ்' கிளர்ச்சியாளர்கள், அதிபர் அப்த் ரப்பு மன்சூர் ஹதிக்கு எதிராக கடந்த ஆண்டு போரில் ஈடுபட்டனர். தலைநகர் சனா உள்பட பல பகுதிகளை அவர்கள் கைப்பற்றியதைத் டொடர்ந்து, ரியாத் நகருக்கு அதிபர் தப்பிச்சென்றார்.

அதனைத் தொடர்ந்து ஏமன் நாட்டை கிளர்ச்சியாளர்களிடம் இருந்து மீட்பதற்காக சவுதி அரேபியா தலைமையில் வளைகுடா நாடுகள் அடங்கிய கூட்டுப்படை அரசுக்கு ஆதராவாக போரில் இறங்கியது. கிளர்ச்சியாளர்களுடன் சண்டையிட்டு, பல நகரங்களை ஒவ்வொன்றாக இந்தக் கூட்டுப்படை மீட்டு வருகிறது.
இந்நிலையில், ஏமன் நாட்டின் ஹொடிடா துறைமுகத்தில் எண்ணெய் கடத்தல்காரர்கள் மீது கடந்த சில நாட்களுக்கு முன்னர் சவுதி கூட்டுப்படை தாக்குதல் நடத்தியது. இதில் அப்பாவி இந்தியர்கள் 20 பேர் பலியானதாக முதலில் தகவல்கள் வெளியானது.
கடத்தல்காரர்கள், இரண்டு படகுகளில் வந்து எண்ணெயை கொள்ளையடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவும், அதனை முறியடிப்பதற்காக சவுதி கூட்டுப்படை விமானங்கள் குண்டு வீசித் தாக்குதல் நடத்தியதாகவும் கூறப்பட்டது.
ஆனால், இந்தத் தாக்குதலில் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட 20 இந்தியர்களில் 13 பேர் உயிருடன் உள்ளதாகவும், மீதமுள்ள 7 பேரை மட்டும் காணவில்லை என்றும் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் விகாஸ் ஸ்வருப் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், மாயமான அந்த 7 இந்தியர்களில் 6 பேரின் உடல் கிடைத்திருப்பதாக இன்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. காணாமல் போன மற்றொரு நபரைத் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவிக்கப் பட்டு விட்டதாகவும், தலைநகர் திஜிபோதியில் உள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளுடன் மத்திய அரசு தொடர்ந்து தொடர்பில் இருந்து வருவதாகவும் மத்திய வெளியுறவுத் துறை செய்தி தொடர்பாளர் ஸ்வரூப் தெரிவித்துள்ளார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications