சவூதியிலிருந்து வந்த பிணத்தின் உடலில் முக்கிய பாகங்களைக் காணவில்லை!
வாரணாசி: சவூதியில் மரணமடைந்த நபரின் உடல் இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் அந்த உடலிலிருந்து பல முக்கிய உள்ளுறுப்புகள் காணாமல் போயிருப்பது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் காஸியாப்பூர் மாவட்டம் ஹர்ஷர்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்தின் ராஜ்பார். இவர் சவூதியில் வேலை பார்க்க 2013ம் ஆண்டு கிளம்பிப் போயிருந்தார். அவருக்கு மனைவி ஷீலா, 3 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் 10 மாதங்களுக்கு முன்பு ராம்தின் மரணமடைந்தார். அவரது உடலை உத்திரப்பிரதேசத்திற்குக் கொண்டு வர முயற்சிகள் மந்த கதியில் இருந்து வந்தன. ஒருவழியாக சமீபத்தில் உடல் வந்து சேர்ந்தது. இதையடுத்து இங்குள்ள மருத்துவமனையில் அவரது உடலை மறு பிரதேப் பரிசோதனை நடத்தியபோது அவரது உடலில் பல முக்கிய உள்ளுறுப்புகள் இல்லாமல் இருந்தது கண்டு டாக்டர்களை அதிர்ச்சி அடைந்தனர்.

அவர் மரணமடைவதற்கு முன்பு தனது மனைவியிடம் ஒரு முறை பேசியபோது தன்னை தனது உரிமையாளர் கொல்லப் போவதாக கூறி அழுதுள்ளார். இதனால் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக குடும்பத்தினர், உறவினர்கள் கூறுகிறார்கள்.
தற்போது ராம்தின் உடலில் பல முக்கிய உள்ளுறுப்புகள் இல்லாததால் இதுகுறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று பிரதமர், ஜனாதிபதி, வெளியுறவு அமைச்சர் ஆகியோருக்கு கோரி்க்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராம்தின் உடலில் சிறுநீரகம், கல்லீரல், கணையம் ஆகியவை இல்லை என்று கூறபப்டுகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications