டெல்லி இந்தியா கேட் அருகே தூக்கில் தொங்கிய வாலிபர்: கொலையா? தற்கொலையா?
டெல்லி: பரபரப்பான டெல்லி இந்தியா கேட் பகுதியில் உள்ள மரத்தில் வாலிபர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லியின் அடையாளமான இந்தியா கேட் பகுதி பாதுகாப்பு அதிகம் மிக்க பகுதியாகும். தமிழ் சினிமாக்களில் இந்த இடங்களில் கொலைகள் நடப்பது போல காண்பிக்கப்படும். ஆனால் 24 மணிநேரமும் போலீஸ் பாதுகாப்பு வாகனம் சுற்றி வரும் இடம்தான் இந்தியா கேட் பகுதி.

நேற்று அதிகாலையில் இந்த இடத்திற்கு அருகில் உள்ள பூங்காவில் உள்ள ஒரு மரத்தில் இளைஞர் ஒருவரின் சடலம் தூக்கில் தொங்கவிடப்பட்டிருந்தது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சடலத்தைக் கைப்பற்றி பரிசோதனை செய்தனர். அவரது கழுத்தில் இருந்த ஐ.டி கார்டு மூலம் உயிரிழந்த இளைஞர் பெயர் ஷேசாநாத் என்பதும் அவரது மேற்கு டெல்லி பகுதியைச் சேர்ந்தவர் என்றும் தெரியவந்தது.
உடல் ஊனமுற்றவரான இந்த இளைஞர் தூக்கில் தொங்கிய காரணம் என்பது பற்றி தெரியவில்லை என்று டெபுடி கமிஷனர் விஜய் சிங் தெரிவித்துள்ளார். தற்கொலை கடிதம் எதுவும் அந்த இடத்தில் இல்லை என்றும் போலீசார் தெரிவித்தனர். அதிகாலை மூன்று மணியில் இருந்து 5 மணிக்குள் அவர் உயிரிழந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்துள்ளனர்.
அதேசமயம், இது தற்கொலையா அல்லது வேறு யாரேனும் கொலை செய்து மரத்தில் தொங்கவிட்டுள்ளனரா என்றும் போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
-
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
இந்த வாரம் ஓடிடியை கலக்க வரும் 11 படங்கள், வெப் சீரிஸ்கள்.. தனுஷின் ‘கர’ முதல் ‘ஸ்பைடர்-நுவார்’ வரை












Click it and Unblock the Notifications