காணாமல் போன புனே விளம்பர நிறுவனத்தைச் சேர்ந்த நால்வரில் ஒருவர் சடலம் மீட்பு!
புனே: காணாமல் போன புனே விளம்பர நிறுவன நிர்வாகிகள் 4 பேரில் ஒருவரின் சடலம் ஆற்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய மூவரில் ஆற்றில் மூழ்கியிருக்கின்றனரா என தொடர்ந்து தேடப்பட்டு வருகிறது.
புனேவை சேர்ந்த விளம்பர நிறுவனம் ஒன்றின் உரிமையாளர் பிரணவ் லேலே. அவர் கோவா சுற்றுலா செல்ல திட்டமிட்டிருந்தார். அவருடன் பணியாளர்கள் சிந்தன் பெளச், ஷகில் குரேஷி ஆகியோரும் கோவா செல்ல முடிவு செய்திருந்தனர்.
அத்துடன் இவர்கள் மூவரும் செல்லும் வழியில் கோலாபூரில் பெண் ஊழியரான ஸ்ருதிகா சந்த்வானியை இறக்கிவிடவும் முடிவு செய்திருந்தனர்.
ஆனால் பிரணவ் லேலே காரில் சென்ற 4 பேருமே கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை என்றும் இவர்களின் கதி என்னவென்று தெரியவில்லை என்றும் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டனர். பிரணவ் லேலே சென்ற கார் கடைசியாக புனே சுங்கசாவடி கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது.
அடுத்த சுங்கச்சாவடியில் அந்த கார் மாயமாகி இருந்தது. இதனால் அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குழப்பமாக இருந்து வந்தது.
இந்நிலையில் புனேவுக்கு அருகே உள்ள ஆறு ஒன்றில் ஆண் சடலம் ஒன்று கரை ஒதுங்கியது. அது தங்களுடைய மகனின் சடலம் என சிந்தன் பெளச்சின் பெற்றோர் உறுதி செய்தனர். இதனால் பிரணவ் லேலே தமது பணியாளர்களுடன் சென்ற கார் ஆற்றில் விழுந்திருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இதையடுத்து ஆற்றில் எஞ்சிய மூவரின் உடல்களையும் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications