பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் ஷியாமக் மீது மாஜி மாணவர்கள் 2 பேர் பாலியல் புகார்
வான்கூவர்: பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டர் ஷியாமக் தவார் தங்களுக்கு பல ஆண்டுகளாக பாலியல் தொல்லை அளித்து வந்ததாக அவரின் நடனப் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் இருவர் கனடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
கனடாவைச் சேர்ந்த பெர்சி ஸ்ராப்(40) மற்றும் ஜிம்மி மிஸ்ட்ரி(33) ஆகியோர் பதின்வயதில் இருக்கையில் மும்பையில் தங்கி பிரபல பாலிவுட் டான்ஸ் மாஸ்டரான ஷியமாக் தவாரின் நடனப் பள்ளியில் டான்ஸ் கற்றுள்ளனர். மேலும் அவர்கள் ஷியாமக்கின் ஆன்மீக குழுவிலும் உறுப்பினர்களாக இருந்தனர்.
அப்போது ஷியாமக் ஆண்டுக் கணக்கில் தங்களுக்கு பாலியல் தொல்லை அளித்தாக அவர்கள் இருவரும் கனடா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். ஷியாமக் தனது டான்ஸர்கள் குழுவில் உள்ள ஆண்களை தனது வீட்டுக்கு அழைத்து படுக்கையில் படுக்க வைத்து அவர்களின் உடலை தடவுவார் என்று அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
ஷியாமக் தனது டான்ஸர் ஆண்களின் உதட்டில் முத்தம் கொடுப்பது, அவர்களின் ஆணுறுப்பை தொடுவது மேலும் அவர்களின் கையை எடுத்து தனது உள்ளாடைக்குள் விட்டு தன்னுடைய ஆணுறுப்பை தொட வைப்பது என்று சில்மிஷம் செய்ததாக மிஸ்ட்ரி தெரிவித்துள்ளார்.
தற்போது ஓரினச்சேர்க்கையாளராக உள்ள ஷ்ராப் கூறுகையில், நான் 16 வயது சிறுவனாக இருக்கையில் ஷியாமக் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். அவர் செய்தது எனக்கு பிடிக்காவிட்டாலும் ஆன்மீகத்தின் பெயரை கூறியதால் பொறுத்துக் கொண்டேன். எனக்கு 17 வயது இருக்கையில் ஷியமாக் என்னை அவரது படுக்கையறைக்கு அழைத்துச் சென்று அவர் மீது என்னை படுக்கை வைத்து பலாத்காரம் செய்ய முயன்றார். ஆனால் நான் அவரை தடுத்துவிட்டேன் என்று கூறியுள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகளை ஷியாமக் மறுத்துள்ளார். அமைதி காக்காமல் தான் எந்த குற்றமும் செய்யாதவன் என்பதை நிரூபிப்பேன் என அவர் தெரிவித்துள்ளார்.
ஷியாமக் 6 நாடுகளில் நடனப் பள்ளி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications