Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜம்முவில் திடீரென வைஷ்ணவி தேவி கோவிலுக்கு போன ஷாருக்கான்.. அப்படியே அமர்ந்து.. ஆஹா என்னாச்சு?

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீநகர்: ஜம்முவில் உள்ள வைஷ்ணவி தேவி கோயிலில் பாலிவுட் நடிகர் 'ஷாருக்கான்' நேற்றிரவு தரிசனம் செய்துள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.

ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் உள்ள திரிகுடா மலையில் வைஷ்ணவி தேவி கோயில் அமைந்திருக்கிறது. இந்துக்களின் புனித தலங்களில் இதுவும் ஒன்றாகும்.

இங்கு ஆண்டுதோறும் சராசரியாக 13 ஆயிரம் பக்தர் தரிசனம் செய்கின்றனர். இமயமலையில் அமைந்துள்ள இக்கோயில் கடல் மட்டத்திலிருந்து சுமார் 5,200 அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

வைஷ்ணவி தேவி கோயில்

வைஷ்ணவி தேவி கோயில்

தென்னிந்தியாவில் திருப்பதி என்றால் வட இந்தியாவில் இந்த வைஷ்ணவி கோயில்தான் பேமஸ். அந்த அளவுக்கு பக்தர்கள் இங்கு வந்து தரிசனம் செய்வார்கள். எண்ணிக்கையிலும் திருப்பதிக்கு அடுத்து இந்த கோயில்தான் இருக்கிறது. இந்த ஆண்டு தொடக்கம் முதல் கடந்த 6ம் தேதி வரை சுமார் 86.4 லட்சம் பேர் இக்கோயிலில் தரிசனம் செய்துள்ளனர். அதேபோல இக்கோயிலில் நவராத்திரி, சிவராத்திரி மற்றும் தீபாவளி ஆகிய பண்டிகைகள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆனால், இந்த விழா நாட்களில் வரும் பக்தர்களின் எண்ணிக்கையை விட புத்தாண்டு தினத்தன்று வரும் பக்தர்களின் எண்ணிக்கையே அதிகமாக இருக்கும். கடந்த ஜனவரி 1ம் தேதி அதிக அளவு பக்தர்கள் இக்கோயிலுக்கு வந்ததில் கூட்ட நெரிசலில் சிக்கி சுமார் 12 பேர் உயிரிழந்தனர்.

புனித பயணம்

புனித பயணம்

இந்நிலையில் இன்னும் சில நாட்களில் புத்தாண்டு தொடங்க உள்ள நிலையில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இக்கோயிலில் தரிசனம் செய்துள்ளார். யாருக்கும் அடையாளம் தெரியாத வண்ணம் தனது முகத்தை மறைத்து அவர் தரிசனத்தில் ஈடுபட்டுள்ளார். தற்போது இது தொடர்பான வீடியோக்கள் சமுக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. இவர் சமீபத்தில்தான் மெக்காவுக்கு சென்று வந்திருக்கிறார். இந்நிலையில் அது முடித்தவுடன் கையோடு வைஷ்ணவி தேவி கோயிலுக்கு சென்று வந்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது. ஆனால் இந்த பயணம் குறித்து ஷாருக் தரப்பிலிருந்து எவ்வித தகவலும் வெளியிடப்படவில்லை.

அதிரடி

அதிரடி

இந்த ஆண்டு தொடங்கியதிலிருந்து ஷாருக்கானை பிரச்னைகள் வாட்டி எடுத்து வருகின்றன. எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் ஹிட் அடிக்காமல் போனது, தனது மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியது என தொடர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படி புனித தலங்களுக்கு அவர் சென்று வருகிறார் என சினிமா துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதனை உறுதி செய்யும் விதமாக ஷாருக் அடுத்த ஆண்டிலிருந்து முற்றிலும் அதிரடி படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடிக்க இருப்பதாகவும் அவருடைய நட்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

ஹிட்

ஹிட்

எதிர்பார்த்த அளவுக்கு படங்கள் ஹிட் அடிக்காமல் போனது, தனது மகன் போதை பொருள் வழக்கில் சிக்கியது என தொடர் பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவே இப்படி புனித தலங்களுக்கு அவர் சென்று வருகிறார் என சினிமா துறை வட்டாரங்கள் கூறுகின்றன. அதனை உறுதி செய்யும் விதமாக ஷாருக் அடுத்த ஆண்டிலிருந்து முற்றிலும் அதிரடி படங்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடிக்க இருப்பதாகவும் அவருடைய நட்பு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+