அயோத்தியில் செட்டில் ஆகிறாரா? ராமர் கோவில் அருகே இடம் வாங்கிய அமிதாப் பச்சன்.. எத்தனை கோடி தெரியுமா?
அயோத்தி: இந்தி நடிகர் அமிதாப்பச்சன் அயோத்தி ராமர் கோவில் அருகே வீட்டு மனை வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 10 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனையை வாங்கியதாக கூறப்படுகிறது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டு வருகிறது. வரும் ஜனவரி 22 ஆம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெறுகிறது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்க நாடு முழுவதும் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

ராமர் கோவில் திறப்புக்கு பிறகு அயோத்திக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை மனதில் கொண்டு அயோத்தியில் ரயில் நிலையம் பல கோடி மதிப்பில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதேபோல் அயோத்தியில் சர்வதேச தரத்தில் புதிய விமான நிலையமும் கட்டப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு, அயோத்தி பெரும் சுற்றுலா தலமாவும் ஆன்மீக தலமாகவும் உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமிதாப் பச்சன் வீட்டு மனை: பெரிய அளவில் பொருளாதார நடவடிக்கைகளும் அயோத்தியில் ராமர் கோவில் திறப்புக்கு பிறகு அதிகரிக்கும் எனத் தெரிகிறது. பலரும் அயோத்தியில் குடியேற திட்டமிட்டு வருகிறார்கள். இதனால் அங்கு சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்து இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்தநிலையில் தான், அயோத்தியில் பிரபல பாலிவுட் நட்சத்திரம் அமிதாப் பச்சன் வீட்டுமனை வாங்கி போட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
10 ஆயிரம் சதுர அடியில் வீட்டு மனையை வாங்கியிருப்பதாகவும் இதன் மதிப்பு சுமார் ரூ. 14.5 கோடி இருக்கும் என்றும் ரியல் எஸ்டேட் நிறுவனம் தெரிவித்துள்ளது. அயோத்தி ராமர் கோவிலில் இருந்து வெறும் 15 நிமிட தொலைவிலும் விமான நிலையத்தில் இருந்து 20 நிமிட தொலைவிலும் அமிதாப்பச்சன் வாங்கி போட்டு இருப்பதாக சொல்லப்படும் இடம் உள்ளதாம்.
51 ஏக்கர் பரப்பளவு: அயோத்தியின் சராயு பகுதியில் இருக்கும் 7 நட்சத்திர அந்தஸ்து கொண்ட வீட்டு மனையை அமிதாப் பச்சன் வாங்கியுள்ளதால் விரைவில் அங்கு குடியேற திட்டமிட்டுள்ளாரா? என்று சமூக வலைத்தளங்களில் அவரது ரசிகர்கள் விவாதித்து வருகிறார்கள். மும்பையைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் மற்றும் ஹவுஸ் டெவலப்மெண்ட் நிறுவனமான ஹவுஸ் ஆஃப் அபிநந்தன் லோதா ( HoABL) என்ற நிறுவனம் அயோத்தி ராமர் கோயிலுக்கு அருகே 51 ஏக்கர் பரப்பளவில் வீட்டுமனை திட்டத்தை செயல்படுத்த இருக்கிறது.
நெட்டிசன்கள் கருத்து: இங்குதான் அமிதாப்பச்சன் வீட்டு மனையை வாங்கியிருப்பதாக சொல்லப்படுகிறது. பாலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரமான அமிதாப் பச்சன் அயோத்தியில் சொந்தமாக வீட்டுமனை வாங்கியிருப்பது பாலிவுட் திரையுலகிலும் கவனம் பெற்றுள்ளது. இன்னும் பல பிரபலங்கள் அயோத்தியில் வீட்டுமனை வாங்கினாலும் ஆச்சயர்படுவதற்கில்லை என்று நெட்டிசன்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications