ஹைதராபாத்தில் குண்டு வெடிப்பு.. எருமை தலை சிதறி பலி.. மியாப்பூரில் பதற்றம்
ஹைதராபாத் மியாப்பூர் பகுதியில் குப்பை கொட்டும் இடத்தில் திடீரென குண்டு வெடித்தது. இதில் அங்கு மேய்ந்து கொண்டிருந்த எருமை தலை சிதறி பலியானது.
ஹைதராபாத்: ஹைதராபாத்தில மியப்பூர் பகுதியில் வெடிகுண்டு வெடித்து எருமை பலியான சம்பவம் அப்பகுதியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுதந்திர தின விழா கொண்டாடப்படும் தருணத்தில், ஹைதராபாத் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்துள்ளது. மியாப்பூர் பகுதியில் மெட்ரோ ரயில் டிப்போ செயல்பட்டு வரும் இடத்தின் அருகில் பொதுமக்கள் குப்பை கொட்டும் இடம் ஒன்று உள்ளது. இந்த இடத்தைச் சுற்றி ஏழை மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

இந்தப் பகுதியில் திடீரென நேற்று வெடிகுண்டு வெடிக்கும் சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதறி அடித்துக் கொண்டு பெரும் சத்தம் வந்த பகுதியை நோக்கி பொதுமக்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அங்கு, 500 மீட்டர் தூரத்தில் எருமையின் தலை ஒன்று சிதறி கிடந்ததைப் பார்த்து மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடன் வெடிகுண்டு நிபுணர்கள் அந்த இடத்திற்கு விரைந்து சென்றனர். குப்பை மேட்டில் கிடந்துள்ள வெடிப்பொருளை எருமை மாடு தின்ன முயன்ற போது இந்த வெடி வெடித்திருக்கலாம் என்று மியாப்பூர் போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், வெடிகுண்டு தொடர்பான வேறு எந்தப் பொருட்களும் இந்தப் பகுதியில் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் தெரிவித்தனர்.
குண்டு வெடித்து எருமை பலியானது எப்படி என்பது குறித்து ஆய்வு செய்ய தடயவியல் துறைக்கு மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன. இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications