பேஷன் ஷோ நிகழ்ச்சி அருகே குண்டுவெடிப்பு.. நடிகை சன்னிலியோனுக்கு என்னவாயிற்று? யாருக்கு காயம்?
சன்னி லியோன் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு
இம்பால்: பேஷன் ஷோ நிகழ்ச்சியில் சன்னிலியோன் கலந்து கொண்ட போது அந்த நிகழ்விடத்திற்கு அருகே ஒரு இடத்தில் குண்டுவெடிப்பு நடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அமெரிக்காவில் பிறந்த இந்தியா வம்சாவளியை சேர்ந்தவர் சன்னி லியோன். இவர் கவர்ச்சி நடிகையாவார். முதலில் ஆபாச படங்களில் நடித்து வந்தார். இதன் பின்னர் இந்தியா வந்த அவர் பாலிவுட் திரைப்படங்களில் நடிக்க தொடங்கி கவர்ச்சி கன்னியாக வலம் வருகிறார்.
இவர் பாலிவுட் மட்டும் இல்லாமல் தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கு இணையாக சன்னிலியோனுக்கு இந்தியா முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கடைத் திறப்பு விழா
அவர் கடைத் திறப்பு விழாவுக்கோ ஏதேனும் நிகழ்ச்சிக்கோ வருவதை அறிந்தால் அவரை பார்க்க ஏராளமானோர் குவிந்து விடுகிறார்கள். தமிழில் இவர் வடகறி எனும் படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார். அது போல் அண்மையில் வெளியான ஓ மை கோஸ்ட் படத்தில் கதாநாயகியாக சன்னி லியோன் நடித்திருந்தார்.

ஓமை கோஸ்ட்
இவரது தமிழகத்தில் நடந்த ஓ மை கோஸ்ட் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தனக்கு ஜி.பி.முத்துவை மிகவும் பிடிக்கும் என கூறிய சன்னி லியோன் அவருக்கு பால் கோவா ஊட்டி விட்டு மகிழ்ந்தார். மேலும் அந்த விழாவுக்கு பிங்க் நிறத்தில் பட்டுப்புடவை அணிந்தார். இது ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது.

மணிப்பூர் தலைநகர்
மணிப்பூர் தலைநகர் இம்பாலில் உள்ள ஹட்டா கேங்ஜெய்பங் பகுதியில் பேஷன் ஷோ நிகழ்ச்சி ஒன்றில் சன்னி லியோன் கலந்து கொள்ள முடிவானது. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர். இந்த நிலையில் பேஷன் ஷோ நடைபெறும் பகுதியில் இருந்து 100 மீட்டர் தொலைவில் இன்று காலை 6.30 மணிக்கு குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

சலசலப்பு
இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. இந்த குண்டுவெடிப்பால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இது சக்தி வாய்ந்த வெடிகுண்டு அல்லது எறிகுண்டாக இருக்கலாம் என தெரிகிறது. இந்த குண்டுவெடிப்பு சம்பவம் எதனால் ஏற்பட்டது என தெரியவில்லை. இந்த சம்பவத்திற்கு பயங்கரவாத அமைப்பு ஏதும் பொறுப்பேற்கவில்லை. சன்னி லியோன் கலந்து கொள்ளவிருந்த நிகழ்ச்சியில் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications