மோடி பேசிய மைதானத்தில் மீண்டும் வெடிகுண்டு கண்டுபிடிப்பு.. அசம்பாவிதம் தவிர்ப்பு
பாட்னா: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி பங்கேற்ற கூட்டம் நடந்த பாட்னா காந்தி மைதானத்தில் இன்று மீண்டும் வெடிகுண்டு இருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்று சோதனையிட்டு வெடிகுண்டைக் கண்டுபிடித்தனர்.
பின்னர் இந்த வெடிகுண்டு பாதுகாப்பான முறையில் செயலிழக்கச் செய்யப்பட்டது. இந்த மைதானத்தில்தான் ஞாயிற்றுக்கிழமையன்று மோடி பேசினார். அவர் வருவதற்கு முன்புதான் தொடர் குண்டுவெடிப்புநடந்தது. அதில் 6 பேர் பலியானார்கள்.

இந்த நிலையில் இந்த மைதானத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. இதையடுத்து அங்கு வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து சென்றனர். காந்தி மைதானம் முழுவதும் வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்கள் சகிதம் தீவிர சோதனை போட்டனர். அதில் வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து மூத்த போலீஸ் அதிகாரி ஜெயந்த் காந்த் கூறுகையில், மர்மப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளோம். அந்தப் பகுதி முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பொருள் குறித்து தீவிர ஆய்வு நடந்து வருகிறது என்று கூறியிருந்தார்.
இந்த மர்மப் பொருள் பின்னர் வெடிகுண்டு என்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள் அதை பாதுகாப்பான முறையில் வெடிக்கச் செய்தனர். இதன் மூலம் மீண்டும் ஒரு அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது.
ராஞ்சியில் சிக்கிய வெடிபொருட்கள்
இதற்கிடையே, ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒரு வீட்டிலிருந்து கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களை போலீஸார் தீவிர ஆய்வுக்குட்படுத்தியுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications