ஜெட் ஏர்வேஸை அடுத்து 10 இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்
டெல்லி: இன்டிகோ நிறுவனத்தை சேர்ந்த 10 விமானங்களுக்கு மர்ம நபர் ஒருவர் தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானங்கள் 5க்கு செவ்வாய்க்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு சென்னையில் உள்ள இன்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவன கால் சென்டருக்கு ஒரு போன் அழைப்பு வந்தது.

எடுத்து பேசியபோது மறுமுனையில் பேசிய நபர் 10 இன்டிகோ விமானங்களில் வெடிகுண்டுகள் இருப்பதாக தெரிவித்துவிட்டு இணைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து டெல்லியில் உள்ள இந்திரா காந்தி விமான நிலையத்திற்கு ஜம்முவில் இருந்து வந்த விமானத்தில் இருந்த பயணிகள் கீழே இறக்கிவிடப்பட்டு சோதனை நடத்தப்பட்டுள்ளது.
டெல்லி விமான நிலையத்தில் தரையிறங்கும் அனைத்து இன்டிகோ விமானங்களும் சோதனை செய்யப்படுகிறது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமானத்தை ஓரங்கட்டி அதை முழுமையாக சோதனை செய்ய 5 மணிநேரம் ஆகும். இதனால் இன்டிகோ நிறுவனத்திற்கு மணிக்கு ரூ.7 லட்சம் நஷ்டம் ஏற்படும். வெடிகுண்டு சோதனைகளால் இன்டிகோ நிறுவனத்திற்கு ரூ.2.5 கோடி முதல் ரூ.3 கோடி வரை நஷ்டம் ஏற்படும்.
பிரஸ்ஸல்ஸ் விமான நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல்கள் நடந்துள்ள வேளையில் இன்டிகோ விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications