டெல்லி மெட்ரோ ரயில் நிலையத்தில் வெடிகுண்டு புரளி: பயணிகள் கடும் அவஸ்தை
டெல்லி: டெல்லியிலுள்ள ஹூடா சிட்டி சென்டர் மெட்ரோ ரயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் அந்த ரயில் நிலையம் மூடப்ப்டடு பயணிகள் அவஸ்தைக்குள்ளாகினர்.
டெல்லி மெட்ரோ ரயில் ஆணைய அலுவலகத்திற்கு இன்று மாலை ஒரு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. மறுமுனையில் பேசிய நபர் ஹூடா சிட்டி சென்டர் ரயில் நிலையம் உட்பட மூன்று மெட்ரோ ரயில் நிலையங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளதாகவும், சிறிது நேரத்தில் அது வெடித்து சிதறும் என்றும் கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

இந்த தகவல் போலீசாருக்கு அளிக்கப்பட்டது. ஹூடா சிட்டி ரயில் நிலையத்திற்கு போலீசார், வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் விரைந்தனர். சோதனை நடத்த வசதியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு ரயில் நிலையம் சீல் வைக்கப்பட்டது. அந்த மார்க்கத்தில் செல்லும் அனைத்து ரயில்களும் நிறுத்தப்பட்டன.
3 மணி நேர சோதனைக்கு பிறகு வெடிகுண்டுகள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதையடுத்து அந்த தொலைபேசி அழைப்பு புலறி என்பது தெரியவந்தது. பெஷாவர் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து விஷமிகள் இதுபோல புரளியை கிளப்பியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. போன் செய்தவரை கண்டுபிடிக்க போலீசார் களமிறங்கியுள்ளனர்.
இந்த சம்பவத்தால் மெட்ரோ ரயில் பயணிகள் கடும் அவஸ்தையடைந்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications