சஞ்சய்தத்துக்கு பரோல் நீட்டிப்பு- மகா. அரசுக்கு மும்பை ஹைகோர்ட் கண்டனம்

மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 5 ஆண்டு தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத், புணே எரவாடா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். உடல்நிலை சரியில்லாத மனைவியை கவனித்துக் கொள்ள வேண்டும் என்று கோரியதையடுத்து கடந்த டிசம்பர் மாதம் அவர் ஒரு மாதம் பரோலில் விடுவிக்கப்பட்டார்.
பிறகு, கடந்த மாதம் பரோல் நீட்டிக்கப்பட்டது. அதையடுத்தும் மீண்டும் மார்ச் 21 ஆம் தேதி வரை பரோல் நீட்டிக்கப்பட்டது. அவருக்கு பரோல் காலத்தை நீட்டித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து மும்பை உயர் நீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப்பட்டது.
இந்த மும்பை உயர் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மாநில அரசு தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தக்கூடாது என்றும், கைதிகளிடையே பாரபட்சம் காட்டக்கூடாது என்றும் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
சாதாரண குடிமகன் பரோல் பெற ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000 என பிணைத் தொகை வாங்கப்படுகிறது. ஆனால் சஞ்சய் தத்திடம் இருந்து ரூ. 5,000 மட்டுமே பெறப்பட்டுள்ளது. மாநில அரசு எதனால் இந்த பாரபட்சம் காட்டுகிறது? என்றும் மும்பை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
மகாராஷ்டிர மாநில தலைமைச் செயலாளர் ஒரு குழு அமைத்து பரோல் விதிமுறைகளில் ஏற்றத் தாழ்வுகளை களைந்து 4 வாரத்துக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications