'அமிர்தானந்தமயி'- குண்டு போடும் புத்தகம்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கேரளாவை சேர்ந்த பெண் சாமியார் அமிர்தானந்தமயி தொடர்பாக ஒரு புத்தகத்தை எழுதி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அவரது முன்னாள் உதவியாளர் கெயில் ட்ரெட்வெல் என்ற காயத்ரி.

கேரளாவை சேர்ந்த சாமியார் அமிர்தானந்தமயி சாமியார் தன்னை பார்க்க வரும் பக்தர்களை கட்டிப்பிடித்துதான் ஆசீர்வாதம் செய்வார். அவருக்கு நாடு முழுவதும் ஏராளமான மடங்கள் இருக்கின்றன. அவரை பின்பற்றும் பக்தர்களும் லட்சக்கணக்கில் இருக்கின்றனர்.

இந்நிலையில் அவரிடம் உதவியாளராக இருந்த கெயில் ட்ரெட்வெல் என்ற காயத்ரி, ஹோலி ஹெல் (Holy Hell) என்ற தலைப்பில் ஒரு புத்தகம் வெளியிட்டுள்ளார். அந்த புத்தகத்தில் அமிர்தானந்தமயியின் செயல்கள் பலவற்றையும் அம்பலப்படுத்தியுள்ளார்.

Book on Amritanandamayi by former disciple raises grave allegations

மேலும் அமிர்தானந்தமயி ஆசிரமத்தில் பணத்தை தங்கமாக மாற்றி அவரது உறவினர்கள் எப்படியெல்லாம் செல்வ செழிப்புடன் இருக்கின்றனர் என்றும் விவரிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் தவறு செய்தால் அமிர்தானந்தமயி அடிப்பது, கடிப்பது போன்ற தண்டனைகள் கொடுப்பார் என்றும் காயத்ரி குற்றம் சாட்டியுள்ளார்.

அத்துடன் அமிர்தானந்தமயியின் ஆண் சீடர்களால் தான் பாலியல் பலாத்காரத்துக்கு உள்ளானதாகவும் கெயில் ட்ரெட்வெல் என்ற காயத்ரி தமது புத்தகத்தில் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் இந்தப் புத்தகத்தில் இன்னும் பல அதிர்ச்சிகரமான தகவல்களும் உள்ளன. ஆசிரத்தில் இருந்த பெண் அதுவும் அமிர்தானந்தமயியின் உதவியாளராக இருந்த பெண் எழுதிய புத்தகம் என்பதால் இந்தத் தகவல்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

தற்போது ஹவாயில் வசித்து வருகிறார் கெயில் ட்ரெட்வெல். அவரது இந்த புத்தகம் அமேசான்.காம் உள்ளிட்ட ஆன்லைன் விற்பனை தளங்களில் பரபரப்பாக விற்பனையாகி கொண்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+