சொந்த மண்ணிலேயே டிரெண்டாகும் Go Back Modi! குஜராத் பாலம் விபத்தால்.. அதிர்ச்சியில் பாஜக ஆதரவாளர்கள்
காந்தி நகர்: குஜராத் பாலம் விபத்து காரணமாகப் பிரதமர் நரேந்திர மோடி இப்போது குஜராத் சென்றுள்ள நிலையில், திடீரென ஹேஷ்டேக் ஒன்று டிரெண்டாகி வருகிறது.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் குஜராத்தில் மோர்பி தொங்கு பாலம் கட்டப்பட்டது. கடந்த 1879ஆம் ஆண்டு கட்டப்பட்ட இந்த பாலம் இத்தனை ஆண்டுகளாகப் பயன்பாட்டில் தான் இருந்தது.
இந்தாண்டு தொடக்கத்தில் தான் பராமரிப்பு பணிகளுக்காக இந்த பாலம் மூடப்பட்டது. சுமார் 7 மாதங்களாகப் பாலத்தின் பராமரிப்பு பணிகள் நடந்தன.

விபத்து
இதையடுத்து கடந்த அக்.25ஆம் தேதி இந்த பாலத்தின் பராமரிப்பு பணிகள் முடிந்து திறக்கப்பட்டது. இதையடுத்து பாலத்தில் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்பட்டன. இந்தச் சூழலில் தான் நேற்று முன்தினம் இந்த தொங்கு பாலம் இடிந்து விழுந்து மிக மோசமான விபத்து ஏற்பட்டது. இதுவரை குறைந்தது 130 பேர் இந்த விபத்தில் பலியாகி உள்ளது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது. மீட்புப் பணிகள் ஒரு பக்கம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

உயிரிழப்பு
இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்குமோ என அஞ்சப்படுகிறது. இந்த விபத்திற்குக் குஜராத் அரசு பொறுப்பேற்றுள்ளது. மத்திய மாநில அரசுகள் உயிரிழந்தோருக்கும் காயமடைந்தோருக்கும் நிவாரணத்தை அறிவித்து உள்ளது. இந்த பாலம் அதிகபட்சமாக 125 பேரின் எடையைத் தான் தாங்க முடியும். இருப்பினும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் சுமார் 500 பேர் வரை பாலத்தில் அனுமதித்து உள்ளனர். இதுவே விபத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் காரணமாக இருந்து உள்ளது.

பிரதமர் மோடி
பிரதமரின் சொந்த மாநிலத்தில் இந்த விபத்து நடந்ததால், இந்த விவகாரம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி உடனடியாக அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க உத்தரவிட்டார். மேலும், தனது பிரசார நிகழ்வுகளையும் முழுமையாக ரத்து செய்தார். இந்த விபத்திற்கு இரங்கல் தெரிவித்து இருந்த பிரதமர் நரேந்திர மோடி விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு செய்யக் குஜராத் சென்றார். மேலும், காயமடைந்தோரையும் அவர் மருத்துவமனைக்குச் சென்று சந்திக்கிறார்.

ஹேஷ்டேக்
பிரதமர் மோடி குஜராத்திற்குச் செல்லும் நிலையில் சமூக வலைத்தளங்களில் திடீரென Go_Back_Modi என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாக ஆரம்பித்தது. எப்போதும் பிரதமர் மோடி தமிழகம் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆட்சியில் இருக்கும் மாநிலங்களுக்குச் செல்லும் போது தான் இதுபோன்ற ஹேஷ்டேக் டிரெண்டாகும். ஆனால், இப்போது மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்திற்குச் செல்லும் போது இந்த ஹேஷ்டேக் டிராண்டாகி வருகிறது.

டிரெண்டிங்
ட்விட்டர் தரவுகளின்படி பிற்பகல் வரை 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ட்வீட்கள் Go_Back_Modi என்ற ஹேஷ்டேகில் பதிவிடப்பட்டு இருக்கிறது. பிரதமர் வருவதால் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ள மருத்துவமனை புனரமைக்கும் பணிகள் நடைபெறும் நிலையில், அதை விமர்சித்தே பலரும் இந்த ஹேஷ்டேகில் பதிவிட்டு வருகின்றனர். வளர்ச்சி பணிகளில் கவனம் செலுத்தாமல் நாட்டை விற்பதில் கவனம் செலுத்தினால் இதுதான் நடக்கும் என்றும் சிலர் கூறி வருகின்றனர்.

பதிலடி
தமிழ்நாட்டிலும் சிலர் இந்த ஹேஷ்டேகில் கருத்து கூறி வருகின்றனர். திமுகவின் ராஜீவ்காந்தி, பிரதமரின் சொந்த மாநிலத்தில் இருந்தே ஹேஷ்டேக் ட்ரெண்டவதாக கூறியிருக்கிறார். அதேநேரம் மறுபுறம் பாஜக ஆதரவாளர்கள் மற்றொரு ஹேஷ்டேக்கை உடனடியாக டிரெண்டாக்கினர். GujaratWithModiJi என்ற அந்த ஹேஷ்டேக்கில் இதுவரை 15000 மேற்பட்டோர் கருத்து பதிவிட்டு உள்ளனர்.

பழைய சம்பவங்கள்
எப்போதும் குஜராத் பிரதமர் மோடியுடன் தான் இருக்கும் என்று அவர்கள் கூறி வருகின்றனர். மேலும், கடந்த காலத்தில் பெரிய வெள்ளம் வந்த போது உடனடியாக களத்தில் இறங்கி பொதுமக்களிடம் சென்று குறைகளைக் கேட்டறிந்த படங்களையும் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர். இந்த இரு ஹேஷ்டேக்கும் தான் இணையத்தில் இப்போது மாறி மாறி டிரெண்டாகி வருகிறது.

அட்டாக்
பிரதமரின் வருகையை முன்னிட்டு அங்குள்ள மருத்துவமனையை பெயிண்ட் அடித்து, பெட் ஷீட்டை எல்லாம் கூட மாற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது. இதைச் சாடிய எதிர்க்கட்சிகள், "காயமடைந்தவர்களைக் கவனிப்பதை விட மோடியின் வருகைக்கு முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இதுவே அவர்கள் மக்களை எப்படி நடத்துகிறார்கள் என்பதைக் காட்டுகிறது" என்று கூறி வருகின்றனர்
-
முதல்வர் பதவியை பிடுங்கிய பிறகும் இப்படியா! நிதிஷுக்கு அதிர்ச்சி கொடுத்த பாஜக.. ஜனாதிபதி மூலம் செக் -
அதிமுக ஆட்சி இல்லையாம்.. "தமிழகத்தில் என்டிஏ அரசு அமையும்!" திட்டவட்டமாக சொன்ன பாஜக தேசிய தலைவர் -
அதிருப்தியில் அண்ணாமலை? தேர்தலில் வாய்ப்பு தராதது ஏன்! பாஜக தலைமை சொன்ன முக்கிய தகவல் -
சின்ன மாநிலம் தான்.. ஆனால் "தேசிய" அரசியலையே முடிவு செய்யுது.. அசாம் தேர்தல் ஏன் முக்கியம்! -
"அந்த 5%.." கேரளாவில் அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத மிக முக்கிய மாற்றம்! காரணம் பாஜக தான்! -
ஈரான் போர் முடிந்ததும்.. இந்தியாவுக்கு அடுத்த பிரச்சனை Monsoon.. மக்களே உஷார்! -
பொற்கொடியால் திருமாவளவனுக்கு அரசியல் சிக்கல்? திமுக கண்ட் அண்ட் ரைட் வார்னிங்? அப்ப அந்த 8 தொகுதி -
ஈரானின் 10 கண்டிஷன்.. தடைகளை நீக்கு... நஷ்டஈடு கொடு.. அமெரிக்காவை அதிரவைத்த ஈரானின் அமைதி டீல் -
மண்டியிட்டதா அமெரிக்கா? ஈரான் மீதான எல்லாம் தடைகளும் நீங்குகிறது? டிரம்பிற்கு இது பெரும் சறுக்கல்? -
சீனாவிடம் இருந்து போன மெசேஜ்.. உடனே முடிவை மாற்றிய ஈரான்.. வளைகுடா போர் முடிவுக்கு வந்தது எப்படி? -
கோட்டையை ‘குறி’ வைக்கும் எடப்பாடி.. முக்கிய IAS, IPS அதிகாரிகளை வளைக்க திட்டம்? என்ன நடக்கிறது? -
சிறகடிக்க ஆசை: விஜயா பற்றி முத்துக்கு தெரிந்த பெரிய உண்மை.. மீனா எடுத்த நல்ல முடிவு! அதிர்ச்சியில் குடும்பம்












Click it and Unblock the Notifications