ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் பெற மறுத்த சரிதா தேவிக்கு தற்காலிக தடை
டெல்லி: ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கம் பெற மறுத்த இந்திய குத்துச்சண்டை வீரர் சரிதா தேவிக்கு, தற்காலிகமாக போட்டிகளில் விளையாட சர்வதேச குத்துச்சண்டை சங்கம் தடை விதித்துள்ளது.
தென்கொரியாவில் நடை பெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில், பெண்களுக்கான குத்துச்சண்டையில் லைட்வெயிட் பிரிவின் (57-60 கிலோ) அரை இறுதியில் அனுபவம் வாய்ந்த இந்தியாவின் சரிதாதேவியும், தென்கொரியாவின் ஜினா பார்க்கும் மோதினர்.

சரிதா தேவி சிறப்பாக விளையாடிய போதும், நடுவர்களின் தீர்ப்பால் அவர் வெற்றி வாய்ப்பை இழந்தார். இதனால், மனமுடைந்த சரிதா தேவி, நடுவர்கள் தனக்கு அநீதி இழைத்து விட்டதாக பதக்க அரங்கிலேயே கதறி அழுதார்.
மேலும், தனக்கு அளிக்கப் பட்ட பதக்கத்தை அவர் ஏற்க மறுத்தார். சரிதா தேவியின் இந்த செயல் அங்கிருந்தவர்கள் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்நிலையில், தற்போது சரிதா தேவி குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்க தற்காலிக தடை விதிப்பதாக சர்வதேச குத்துச்சண்டை சங்கம் அறிவித்துள்ளது. இந்த தடை உத்தரவால் உலகக்கோப்பை குத்துச்சண்டை போட்டிகளில் சரிதா பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications