தற்காப்பு கலையில் பிளாக் பெல்ட், தினமும் நீச்சல்.. ராகுல் காந்தி பற்றி வெளிவராத சுவாரசியங்கள்
விளையாட்டு குறித்து பிரபல குத்துச் சண்டை வீரர் விஜேந்தர் சிங் கேட்ட கேள்விக்கு ராகுல்காந்தி கலகலப்பாக பதில் அளித்துள்ளார்.
டெல்லி: டெல்லியில் நேற்று நடந்த முனைவர் பட்டம் பெற்ற அறிஞர்களுக்கான மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி கலந்து கொண்டார். அரசியல் தொடர்பற்ற இந்த மாநாட்டில் ராகுல் காந்தியிடம் நிறைய வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டது.
அப்போது கூட்டத்தில் இருந்த பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுல் காந்தியிடம் இரண்டு கேள்விகளை கேட்டார். கல்யாணம் குறித்தும் , விளையாட்டு குறித்தும் அவர் கேள்விகள் கேட்டிருந்தார்.
இதற்கு உடனே பதில் அளிக்க தொடங்கிய ராகுல் காந்தி தனது கல்யாணம் குறித்து முதலில் பேசினார். அதன்பின்பாக அவரது விளையாட்டு அனுபவங்கள் குறித்து பேசினார். இதில் அவர் விளையாட்டு அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.

டெல்லியில் மாநாடு
கடந்த சில வாரங்களாக குஜராத்தில் தேர்தலுக்காக சுற்றுப் பயணம் மேற்கொண்டு இருந்த ராகுல் இப்போது சிறிய பிரேக் எடுத்து டெல்லிக்கு வந்து இருக்கிறார். நேற்று அவர் டெல்லியில் நடந்த முனைவர் பட்டம் பெற்ற அறிஞர்களுக்கான மாநாட்டில் கலந்து கொண்டார். அரசியல் தொடர்பற்ற இந்த மாநாட்டில் ராகுல் காந்தியிடம் நிறைய வித்தியாசமான கேள்விகள் கேட்கப்பட்டது. அப்போது கூட்டத்தில் இருந்த பிரபல குத்துச்சண்டை வீரர் விஜேந்தர் சிங் ராகுல் காந்தியிடம் இரண்டு கேள்விகளை கேட்டார். கல்யாணம் குறித்தும் , விளையாட்டு குறித்தும் அவர் கேள்விகள் கேட்டிருந்தார்.

கல்யாணம் பண்ணுவீங்களா
இந்த நிலையில் கல்யாணம் குறித்த கேள்விக்கு அவர் மிகவும் இயல்பாக சிரித்துக் கொண்டே பதில் அளித்தார். அதில் '' நீங்க எப்ப கல்யாணம் பண்ணிப்பிங்க, நிறைய பேர் அதுக்காக காத்துக்கிட்டு இருக்காங்க தெரியுமா'' என்று விஜேந்தர் சிங் கூறினார் அதற்கு ராகுல் காந்தி ''இது ரொம்ப பழைய கேள்வி, இருந்தாலும் பதில் சொல்றேன். கல்யாணம் கண்டிப்பாக நடக்கும். ஆனா அது எப்ப நடக்கணும்னு இருக்கோ அப்பதான் நடக்கும் அது வரைக்கும் காத்திருங்க'' என்றார் கலகலப்பாக.

பிளாக் பெல்ட் வாங்கிய ராகுல்
இந்த நிலையில் ராகுல் காந்தியிடம் நீங்கள் விளையாடுவீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் பதில் அளித்தார் அதில் ''நான் எப்போதும் நீச்சல் செய்யக்கூடியவன். ஜப்பானின் மார்ஷியல் ஆர்ட்ஸ் கலையில் பிளாக் பெல்ட் வாங்கி இருக்கிறேன். நான் தினமும் இதை தொடர்ந்து செய்கிறேன்" என்றார். இதுகுறித்து சீக்கிரம் வீடியோ போடும்படி கேட்ட விஜேந்தர் சிங்கிடம் ''தாராளமாக, சீக்கிரம் வெளியிடுகிறேன்'' என்று கூறினார்.

பிட்னெஸ் ரகசியம்
மேலும் அவர் தனது பிட்னெஸ் ரகசியம் குறித்தும் இதில் பகிர்ந்து கொண்டார். அதில் அவர் ''நான் தினமும் கடினமாக பயிற்சி செய்வேன். அதிக நேரம் நீச்சல் அடிப்பேன். கடந்த மூன்று மாதங்களாக பிரச்சாரம் காரணமாக சரியாக பயிற்சி செய்ய முடியவில்லை. இல்லையென்றால் இன்னும் பிட்டாக இருந்திருப்பேன் என கலகலப்பாக கூறினார். பல வருடங்களுக்கு முன்பே கராத்தையும், மார்ஷியல் ஆர்ட்ஸும் பயின்றேன்'' என்றும் கூறினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications