ஆதார் அட்டை கிடைக்காத சோகத்தில் 11 வயது சிறுவன் தற்கொலை!
விசாகப்பட்டிணம்: ஆதார் அடையாள அட்டை பெற முடியவில்லை என்று மனமுடைந்து 11 வயது சிறுவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ஆந்திராவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டணம் மாவட்டம் திகுவா கோலாபுட் என்ற கிராமத்தை சேர்ந்த சிறுவன் பாலகிருஷ்ணன் (11), அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படித்து வந்தான்.

அரசு கல்வி உதவித் தொகையை அவனது கணக்கில் இணைக்க ஆதார் அடையாள அட்டை தேவைப்படுவதாக பாலகிருஷ்ணனிடம் பள்ளி ஆசிரியர் கேட்டுள்ளார்.
ஆதார் அட்டை பெற முயன்றபோது, சிறுவனின் கை விரல் ரேகையை பதிவு செய்ய முடியவில்லை என்று கூறப்படுகிறது. சிறுவனின் மூன்று விரல்கள் ஒன்றாக சேர்ந்து இருந்ததால் அவனது விரல் ரேகையை பதிவு செய்ய முடியவில்லை என்று ஆதார் அதிகாரிகள் கூறிவிட்டனர்.
அரகு மற்றும் விசாகப்பட்டணம் ஆகிய இரண்டு மாவட்டங்களிலும் சிறுவனால் ஆதார் அடையாள அட்டை பெற முடியவில்லை. இதனால் வேதனை அடைந்த மாணவன் தனது வீட்டுக்கு திரும்பியுள்ளான்.
இரவு வீட்டில் அனைவரும் தூங்கியதும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். பழங்குடியின நலத்துறை அமைச்சர் ராவெல்லா கிஷோர் பாபு உத்தரவின்படி இதுகுறித்து விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. விரிவான அறிக்கையை பழங்குடியினர் நல துணை இயக்குநர் தாக்கல் செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
-
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி!












Click it and Unblock the Notifications