பெண்களே இந்த வீடியோ உங்களுக்கே உங்களுக்கு மட்டும் தான்: சூதானமா இருந்துக்கோங்க!
மும்பை: பப், ஹோட்டல்களில் பார்ட்டிக்கு செல்லும் பெண்களை ஆண்கள் எவ்வாறு எளிதில் ஏமாற்றலாம் என்பது குறித்த வீடியோ இணையதளத்தில் வெளியாகி தீயாக பரவியுள்ளது.
இந்த ஆண்டு இன்னுடம் சில நாட்களில் நிறைவடைய உள்ளது. புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகிறார்கள். நள்ளிரவில் புத்தாண்டை வரவேற்க மக்கள் பல திட்டங்களை தீட்டி வருகிறார்கள்.
புத்தாண்டு அன்று பப்புகள், பார்கள், ஹோட்டல்களில் மது அருந்தி கொண்டாடும் கூட்டத்திற்கும் குறைவிருக்காது. இந்நிலையில் தான் தக்க சமயத்தில் ஒரு வீடியோ வெளியாகி தீயாக பரவியுள்ளது.
வீடியோவின் விபரம் வருமாறு,
நைட்கிளப் ஒன்றில் அமர்ந்து தனியாக மது அருந்தும் இளம்பெண்களிடம் வாலிபர் ஒருவர் நைசாகப் பேசி அவர்கள் கவனிக்காத நேரத்தில் மதுவில் போதைப் பொருளை கலந்துவிடுகிறார். பின்னர் தான் செய்ததை கூறி முன்பின் தெரியாதவர்களிடம் மது கோப்பையை விட்டுவிட்டு எங்கும் சென்றால் என்ன விபரீதம் ஏற்படும் என்பதை அவர் அந்த பெண்களிடம் தெரிவிக்கிறார்.












Click it and Unblock the Notifications