106 பாக்கெட்டுகளை விழுங்கி போதை பொருள் கடத்திய பெண்.. டெல்லி விமான நிலையத்தில் பரபரப்பு
பிரேசிலில் இருந்து டெல்லிக்கு போதைப்பொருள் கடத்தி வந்த பெண் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
Recommended Video

டெல்லி: பிரேசிலில் இருந்து டெல்லிக்கு போதைப்பொருள் கடத்தி வந்த பெண் ஒருவர் டெல்லி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். அந்த பெண்ணின் பெயர் அடையாளம் எதுவும் வெளியிடப்படவில்லை.
இதுவரை டெல்லியில் பிடிக்கப்பட்ட போதைப் பொருட்களில் இதுதான் மிகவும் அதிகம் என்று கூறப்படுகிறது. அதேபோல் ஒரு பெண் தனியாக இவ்வளவு போதை பொருளை கடத்தி வந்ததே இல்லை என்றும் கூறப்படுகிறது.
வயிறுமுழுக்க போதை பொருளை வைத்து அவர் கடத்தி வந்துள்ளார். இவருக்கு பின் பெரிய போதை பொருள் கும்பல் இருப்பதாக கூறப்படுகிறது.

ரகசிய தகவல்
பிரேசிலில் இருந்து சிலர் போதைப்பொருள் கடத்தி வருவதாக, டெல்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு தகவல் சென்றுள்ளது. இதனால் டெல்லி சர்வதேச விமான நிலையத்தில் அவர்கள் சோதனை நடத்தி இருக்கிறார்கள். அப்போதுதான் இந்த பெண் போதை பொருள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது. இதனால் உடனடியாக அந்த பெண் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டார்.

வயிற்றில் கடத்துதல்
விசாரணையில், அவர் தனது வயிற்றில் வைத்து போதைப் பொருளை கடத்தியது தெரியவந்துள்ளது. வயிறு முழுக்க போதை பொருள் இருக்கிறது என்று வாக்குமூலம் அளித்துள்ளார். அயன் படத்தில் காட்டுவது போல சிறிய சிறிய பொட்டலமாக போட்டு, அதை விழுங்கி வயிற்றில் வைத்துள்ளார். இதனால் அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

பெரிய அதிர்ச்சி
மருத்துவமனையில் அந்த பெண்ணிற்கு வாந்தி மாத்திரை கொடுக்கப்பட்டு, மொத்தமாக போதைப்பொருள் பாக்கெட்டுகள் வெளியே எடுக்கப்பட்டது. மொத்தம் 106 பாக்கெட்டுகளில் அவர் போதைப்பொருள் கடத்தியுள்ளார். சரியாக 1.5 கிலோ போதை பொருள் கடத்தியுள்ளார். இதன் மதிப்பு பல கோடியை தாண்டும் என்று டெல்லி போதை பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் தெரிவித்துள்ளது.

கும்பல்
பிரேசிலை சேர்ந்த இந்த பெண்மணி, ஆப்பிரிக்காவை சேர்ந்த போதை கும்பல் கொடுத்த, போதை பொருட்களை இந்தியாவிற்கு கடத்தி வந்துள்ளார். டெல்லியில் இருக்கும் போதை பொருள் கும்பலிடம் கொடுப்பதே இவரது பணியாகும். தற்போது இந்த போதை பொருள் தடுப்பு பிரிவு எப்படியாவது, இதை வைத்து டெல்லியில் இருக்கும் போதை பொருள் கும்பல்களையும் பிடிக்க முயற்சி எடுத்து வருகிறது.












Click it and Unblock the Notifications