தினமும் புடவை.. மாதம் ஒரு பீட்சா.. வேடிக்கையான 8 கண்டிசன்கள்.. இது புதுமாதிரி ‘மணல்கயிறு’!
வேடிக்கையான 8 நிபந்தனைகளில் புதுமணத் தம்பதிகள் கையெழுத்திடும் வீடியோ ஒன்று ரசிக்கும்படி உள்ளது.
திஸ்பூர்: 'மாதம் ஒரு பீட்சா, தினமும் சேலை..' என மணல்கயிறு பட ஸ்டைலில், திருமணத்தின் போது வித்தியாசமான 8 ஒப்பந்தங்களில் மணமக்கள் இருவரும் கையொப்பம் இடும் வீடியோ, இதுவரை சுமார் 42 மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
திருமணம் என்பது பூர்வஜென்ம பந்தம் என்பதையெல்லாம் தாண்டி, நிபந்தனைகளுடன் கூடிய ஒப்பந்தமாகி வருகிறதோ என சமீபகாலமாக நிகழ்வுகளைப் பார்க்கும்போது தோன்றுகிறது. ஒரு விதத்தில் இது நல்லதொரு மாற்றமாகவே பார்க்கப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு, 'எனக்குப் பிடித்த மாதிரி நீயில்லை..' என சண்டை போட்டு பிரிவதைவிட, திருமணத்திற்கு முன்பே, 'நான் இப்படித்தான் எதிர்காலத்தில் இருப்பேன். உனக்கு சம்மதமா?' என உறுதி செய்து கொள்வது நல்லதுதான்.
ஆனால் இப்படி போடப்படும் ஒப்பந்தங்கள் சமயங்களில் சிறுபிள்ளைத்தனமாக, வேடிக்கையாக இருப்பதுதான் இணையத்தில் பேசுபொருளாகி விடுகிறது. அஸ்ஸாமில் நடந்த திருமணமும் அப்படிப்பட்டதுதான்.

திருமண ஒப்பந்தம்
அஸ்ஸாமைச் சேர்ந்த சாந்தி மற்றும் மிண்டு என்ற ஜோடிக்கு சமீபத்தில் திருமணம் நடைபெற்றது. அப்போது அவர்கள் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திடம் வீடியோவை, அவர்களது திருமணத்தைப் பதிவு செய்த வீடியோ நிறுவனம் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் மணமக்கள் குறிப்பிட்டுள்ள நிபந்தனைகள் பார்ப்பவர்களை ஆச்சர்யப்பட வைத்திருக்கிறது.

வேடிக்கையான நிபந்தனைகள்
எட்டு நிபந்தனைகள் அடங்கிய பெரிய அட்டை ஒன்றில் மணமக்கள் கையெழுத்திடுகின்றனர். அதில், முதல் நிபந்தனையாக, 'மாதத்திற்கு ஒரு முறை தான் பீட்சா' என்பதில் தொடங்கி, 8வது நிபந்தனையாக '15 நாட்களுக்கு ஒருமுறை ஷாப்பிங் அழைத்துச் செல்ல வேண்டும்' என முடிகிறது அந்த ஒப்பந்தம். இதற்கு இடையில், ' கண்டிப்பாக தினந்தோறும் சேலை உடுத்த வேண்டும், தினமும் ஜிம் செல்ல வேண்டும், எல்லா பார்ட்டிகளிலும், நல்ல புகைப்படங்களை எடுக்க வேண்டும். இரவு நேர பார்ட்டிகளை என்னோடு மட்டுமே நடத்த அனுமதி' வித்தியாசமான, அதே சமயம் சுவாரஸ்யமான நிபந்தனைகள் உள்ளன.

சாட்சி கையெழுத்து
இந்த 8 அம்ச ஒப்பந்தத்தில் மணமக்கள் மட்டுமின்றி, நாலைந்து பேர் சாட்சி கையெழுத்தும் போட்டுள்ளனர். நகைச்சுவைக்காக நண்பர்கள் சேர்ந்து இப்படி ஒரு ஒப்பந்தத்தை உருவாக்கி இருப்பார்கள் போலும். வீடியோவைப் பார்க்கும் போது அப்படித்தான் தோன்றுகிறது. எது எப்படியோ, இந்த வீடியோ சமூகவலைதளத்தில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
20 லட்சம் பார்வைகள்
'நீயும் இதுபோல் தயாராக இரு' என நகைச்சுவையாக காதலர்கள் பலர் தனது இணையரை டேக் செய்து இந்த ஒப்பந்த வீடியோவைப் பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சிலரோ இந்த ஒப்பந்தத்தில் தங்களுக்கு எது சரிப்பட்டு வராது என்பதை மட்டும் குறிப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர். இதுவரை சுமார் 42 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது இந்த வீடியோ.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications