மாப்பிள்ளைக்கு மயக்க மருந்து கொடுத்துவிட்டு காதலனை மணந்த தில்லாலங்கடி பெண்
லக்னோ: உத்தர பிரதேசத்தில் பெண் ஒருவர் தனது ரகசிய காதலனை திருமணம் செய்ய மணமகனுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்புகளை கொடுத்துள்ளார்.
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் ஜுகல் கிஷோர்(25). அவருக்கும் இந்திராவதி என்ற பெண்ணுக்கும் திருமணம் நிச்சயமானது. இந்நிலையில் இந்திராவதி ஹர்பல் சிங் என்பவரை காதலித்து வந்துள்ளார். திருமணத்தன்று இந்திராவதி மயக்க மருந்து கலந்த இனிப்பை ஜுகலுக்கு அளித்துள்ளார். அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவர் மயங்கிவிட்டார். இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

சிகிச்சை பெற்ற பிறகு திருமண மண்டபத்திற்கு வந்தபோது இந்திராவதிக்கும், ஹர்பல் சிங்கிற்கும் திருமணம் நடந்து முடிந்துவிட்டது. தன்னை வேண்டும் என்றே இந்திராவதி ஏமாற்றிவிட்டதாக ஜுகல் தெரிவித்துள்ளார்.
ஜுகல் ஒரு குடிகாரர். இதை அறிந்ததால் தான் இந்திராவதி திருமணத்தை நிறுத்திவிட்டார். ஜுகலை பற்றிய உண்மையை தன்னிடம் முதலிலேயே கூறவில்லை என்று இந்திராவதி கோபம் அடைந்தார் என்று அவரது குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
ஜுகலுக்கு மயக்க மருந்து கலந்த இனிப்பு எதையும் இந்திராவதி அளிக்கவில்லை. இந்திராவதிக்கும், ஹர்பலுக்கும் திருமணம் நடத்தி வைக்க நாங்கள் தான் முடிவு செய்தோம் என்று குடும்பத்தார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து ஜுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர் திருமணமே முடிந்துவிட்டது இனி எதற்கு புகார் என்று இருவீட்டாரும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் ஆகிவிட்டனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications