ஓ இதான் கைத்தறியா? எனக்கு கிடைச்ச பாக்கியம் - காந்தி ஆசிரமத்தில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்
அகமதாபாத்: குஜராத் வந்துள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு சென்று கைத்தறி ஓட்டி நெகிழ்ந்தார்.
2 நாள் பயணமாக பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்று இந்தியா வந்துள்ளார். குஜராத் விமான நிலையம் வந்தடைந்த அவருக்கு குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல், ஆளுநர் ஆசாரியா தேவ்ராட் மற்றும் அமைச்சர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
விமான நிலையத்திலிருந்து போரீஸ் ஜான்சன் தங்கவிருக்கும் விடுதிக்கு இடையே 4 கி.மீ. பயண தூரத்துக்கு போரீஸ் ஜான்சனுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

உற்சாக வரவேற்பு
விமான நிலையத்திலேயே பாரம்பரிய முறைபடி குஜராத்திய நடனமாடி அவரை கலைஞர்கள் வரவேற்றனர். அதேபோல் அவர் காரில் செல்லும் வழிநெடுகிலும் நடைபாதைகளில் கலைஞர்களை நிறுத்தி நடனங்கள், மலர் தூவல்கள் என பிரம்மாண்ட வரவேற்பை அம்மாநில அரசு அளித்தது. வழக்கமாக குஜராத் வரும் வெளிநாட்டு தலைவர்கள் மகாத்மா காந்தியின் சபர்மதி ஆசிரமத்துக்கு செல்வது வழக்கம்.

சபர்மதி ஆசிரமத்தில் பிரிட்டன் பிரதமர்
அந்த வகையில் போரீஸ் ஜான்சனும் சபர்மதி ஆசிரமம் சென்றார். அங்கு கைத்தறி இயந்திரத்தை இயக்க அவருக்கு ஆசிரம ஊழியர்கள் சொல்லிக்கொடுத்தனர். இதன் பின்னர் சிரித்துக்கொண்டே கைத்தறி இயந்திரத்தை அவர் ஓட்டினார். அப்போது அங்குள்ள பார்வையாளர் வருகை குறிப்பில், "இந்த அசாதாரணமான மனிதரின் ஆசிரமத்துக்கு வருவதும், உலகத்தை சிறப்பாக மாற்ற உண்மை மற்றும் அகிம்சை போன்ற எளிமையான கொள்கைகளை கொண்டு அவர் எவ்வாறு அணி திரட்டினார் என்பதை புரிந்துகொள்வதும் எனக்கு கிடைத்த பெரும் பாக்கியம்" என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொழிலதிபர்களுடன் சந்திப்பு
தொடர்ந்து குஜராத் மாநில தொழிலதிபர்கள் உடனான சந்திப்பில் கலந்துகொள்ளும் போரீஸ் ஜான்சன், முதலீடுகள் தொடர்பாக பேச இருக்கிறார். அதன்பின்னர் பஞ்ச்மஹால் மாவட்டத்தில் உள்ள பிரிட்டனை சேர்ந்த கட்டுமான தொழில்நுட்ப நிறுவனமான ஜே.சி.பி உற்பத்தி தொழிற்சாலையை போரீஸ் ஜான்சன் பார்வையிடுகிறார்.

நாளை மோடியுடன் சந்திப்பு
காந்திநகரில் உள்ள பிரிட்டனின் எடின்பெர்க் பல்கலைக்கழக ஒத்துழைப்போடு தொடங்க இருக்கும் பயோ டெக்னாலஜி பல்கலைக்கழக கட்டுமானப் பணியை அவர் ஆய்வு செய்கிறார். இறுதியாக காந்திநகரில் உள்ள சுவாமி நாராயணன் பகுதியில் அமைந்திருக்கும் அக்ஷரதம் கோயிலுக்கு சென்று போரீஸ் ஜான்சன் பார்வையிட இருக்கிறார். இதையடுத்து டெல்லி புறப்படும் அவர் நாளை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து இருநாட்டு நல்லுறவுகள், பொருளாதார ஒப்பந்தங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளார்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications