அழிந்து வரும் உயிரினமான டோகே கெக்கோ பல்லி.. தேடுதல் வேட்டையில் மீட்ட எல்லை பாதுகாப்பு படை!
கொல்கத்தா: மேற்கு வங்கம் மாநிலம் தெற்கு தினாஜ்பூர் மாவட்டத்திலுள்ள வடக்கு ஆக்ரா கிராமத்தில் இருந்து அருகி வரும் டோகே கெக்கோ பல்லியை வடக்கு வங்காள எல்லைப் பாதுகாப்புப் படை இந்திய - வங்கதேச எல்லையில் மீட்டுள்ளது. இந்த நடவடிக்கையால் வனவிலங்கு பாதுகாப்பிற்கான எல்லை பாதுகாப்பு படையின் அர்ப்பணிப்பை உறுதி செய்துள்ளது.
எல்லை பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், ராய்கஞ்ச் செக்டாரின் 79-வது பட்டாலியன் BSF படைப்பிரிவு நேற்று தேடுதல் வேட்டையை நடத்தியது. இதில், எல்லையை ஒட்டிய பகுதியில் கேட்பாரற்று கிடந்த ஒரு பெட்டிக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 10 அடி நீளமுள்ள டோகே கெக்கோ பல்லி கண்டுபிடிக்கப்பட்டது.

டோகே கெக்கோ பல்லி
டோகே கெக்கோ (Tokay gecko) பல்லி வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972-ன் அட்டவணை I-ன் கீழ் மிகவும் பாதுகாக்கப்பட்ட வனவிலங்கு பட்டியலில் இருக்கிறது. இந்த வகையான பல்லி மருத்துவ குணங்கள் இருப்பதாக நம்பப்படுவதால், கள்ளச்சந்தையில் அதிக விலை கொடுத்து வாங்க தயாராக இருக்கின்றனர். இருப்பினும் எந்தவொரு மருத்துவ குணமும் இருப்பதாக இதுவரை நிரூபிக்கப்படவில்லை.
அதிக மதிப்பு
ஆனாலும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தில் இந்த ரக பல்லிக்கு அதிக மதிப்பு இருப்பதாக பார்க்கப்படுகிறது. தொடர்ந்து, மீட்கப்பட்ட பல்லியை, வனத்துறையினரிடம் எல்லை பாதுகாப்பு படை அதிகாரிகள் ஒப்படைத்தனர். பின், வனத்துறையினர்,பல்லியைப் பாதுகாக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வன விலங்குகள் கடத்தல்
இதுபோன்ற கடத்தல் சம்பவங்கள் நடப்பது முதல்முறையல்ல. எல்லை பாதுகாப்பு படையின் தரவுகளின்படி, வடக்கு வங்காளம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகள் சட்டவிரோத வனவிலங்கு கடத்தலுக்கு முக்கியமான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 2024 முதல் 2025 வரை, எல்லை பாதுகாப்பு படையினர் இந்திய - வங்கதேச எல்லையில் அழிந்து வரும் பல்வேறு உயிரினங்கள் கடத்தலை தடுத்துள்ளனர்.
கடத்தலை தடுத்த எல்லை பாதுகாப்பு படை
400க்கும் மேற்பட்ட ஆமைகள், 200 மணல் போவா பாம்புகள், 279 புறாக்கள், 186 வெளிநாட்டுப் பறவைகள் மற்றும் ஒரு சிறுத்தை உட்பட பல்வேறு உயிரினங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. எல்லைப் பகுதிகளில் வசிக்கும் குடிமக்கள் வனவிலங்குகள் தொடர்பான சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகளை கண்டால், உடனடியாக அருகிலுள்ள எல்லை பாதுகாப்பு படை முகாம் அல்லது வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்பு
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படை, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, வனவிலங்குப் பாதுகாப்பிலும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. அவர்களின் தொடர்ச்சியான முயற்சிகள், அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாப்பதற்கும், சட்டவிரோத வனவிலங்கு வர்த்தகத்தைத் தடுப்பதற்கும் முக்கியப் பங்காற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications