தனி நபர் வருமான வரி செலுத்துவோருக்கு ரூ.40,000 நிலையான கழிவு! பட்ஜெட்டில் அறிவிப்பு
Recommended Video

டெல்லி: மாத சம்பளம் பெறுவோருக்கு பெரும் வருமான வரி சலுகை இருக்கும் என்று எதிர்பார்த்த நிலையில், ஒரே ஒரு சொற்ப சலுகை மட்டுமே பட்ஜெட் அறிவிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. அதுதான் நிலையான கழிவு என்ற திட்டம்.
நிலையான கழிவு (Standard deduction) என்பது புதிய நடைமுறை கிடையாது. ஏற்கனவே அமலில் இருந்த ஒன்றுதான். 2006-07ம் நிதியாண்டு முதல்தான் இந்த நடைமுறை அப்போதைய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தால் நீக்கப்பட்டது.
மீண்டும், நிலையான கழிவு திட்டம் வேறு வழியில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

நீக்கப்பட்டது
முந்தைய நடைமுறைப்படி மொத்த வருவாயில் அதிகபட்சம் ரூ.30,000 என்பது நிலையான கழிவாக வழங்கப்பட்டது. அதற்கு வருமான வரி கணக்கு காட்ட வேண்டிய தேவை இல்லை. இன்று நிதி அமைச்சர் அருண் ஜேட்லி வெளியிட்டுள்ள அறிவிப்புபடி, ரூ.40,000 நிலையான கழிவாக வழங்கப்பட்டுள்ளது.

ரூ.40,000 கிடைக்கும்
ஒரு தனி நபரின் சம்பளம் உள்ளிட்ட மொத்த வருவாயில் இருந்து இந்த ரூ.40,000 தொகையை கழித்துக்கொண்டு எஞ்சிய தொகைக்கு வரி செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும்
உதாரணத்திற்கு, ஒருவரின் ஆண்டு வருமானம் ரூ.5.30 லட்சம் என்றால், இப்போதுள்ள வரி கட்டமைப்புபடி, அவர் 20 சதவீத வருமான வரி கட்ட வேண்டியுள்ளது. ஆனால், நிலையான கழிவு தொகை ரூ.40,000த்தை தனது மொத்த வருமானத்தில் இருந்து குறைத்துவிட்டால், அவரது ஆண்டு வருமானம் ரூ.4.90 லட்சமாக குறையும். அப்போது அவர் 5 சதவீத வருமான வரி கட்டும் பிரிவுக்குள் வந்துவிடுவார். அது அவருக்கு லாபம் தரும். ஆனால் அதில்தான் ஒரு ட்விஸ்ட் உள்ளது.

மெடிக்கல் செலவு ஆதாரம்
2006ம் ஆண்டுவரை, நிலையான கழிவு தொகைக்கு ஆதாரம் (ப்ரூப்) காட்ட வேண்டிய தேவையில்லை. ஆனால் இப்போது மெடிக்கல் செலவீனத்திற்கான ஆதாரம் அல்லது போக்குவரத்து செலவீன ஆதாரம் காட்ட வேண்டும். உதாரணத்திற்கு, ரூ.40,000த்திற்கான மெடிக்கல் பில் தொகையை காண்பித்து இந்த சலுகையை அனுபவித்துக்கொள்ளலாம். ட்விஸ்ட் என்று கூறனோமே அது என்ன தெரியுமா? ஏற்கனவே இருந்த மெடிக்கல் பில் மற்றும் பயணப்படி ஆகிய இரு சலுகைகளையும் பறித்துவிட்டே இந்த நிலையான கழிவு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்களுக்கு பெரிதாக எந்த லாபமும் இல்லை.

வரி கட்டமைப்பில் மாற்றம் இல்லை
மத்திய அரசு பட்ஜெட்டில் மாத வருவாய் பிரிவினருக்கு கிடைத்த ஒரே சலுகை இதுதான் என சிலர் மகிழ்ந்து கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் எந்த மாற்றமும் ஏற்படபோவதில்லை. மாத சம்பளக்காரர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது இந்த பட்ஜெட். மற்றபடி வருமான வரி கட்டமைப்பிலும் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ.2.50 லட்சம் வரையிலான ஆண்டு வருவாய் பிரிவினருக்கு வரி கிடையாது என்பதும், ரூ.2.50 லட்சம் முதல், ரூ.5 லட்சம் வரையிலான வருவாய் பிரிவினருக்கு 5 சதவீதம் வரி, ரூ.5-10 லட்சம் வரையிலான பிரிவினருக்கு 20 சதவீத வரி, ரூ.10 லட்சத்திற்கு மேற்பட்ட வருவாய் பிரிவினருக்கு 30 சதவீத வரி என்பதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications