பட்ஜெட்டால் யாருக்கு சந்தோஷம்... யாருக்கு ஏமாற்றம்? இதோ நீங்கள் ஆவலாக இருந்தது மக்களே!
மத்திய பாஜக அரசின் கடைசி முழு பட்ஜெட்டால் யார் சந்தோஷம் அடைந்திருப்பார்கள், யார் ஏமாற்றமடைந்திருப்பர் என்பதை பார்ப்போம்.
Recommended Video

டெல்லி: மத்தியில் ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் மோடி அரசின் பொது பட்ஜெட்டால் யாரெல்லாம் பயனடைவார்கள், யாரெல்லாம் ஏமாற்றமடைவார்கள் என்ற கேள்வி அனைவர் மனதில் ஏழாமல் இல்லை.
ஜிஎஸ்டி வரி விதிப்புக்கு பிறகு முதல் பட்ஜெட்டை மத்திய பாஜக அரசு தாக்கல் செய்துள்ளது. இது சாமானியர்களுக்கான பட்ஜெட் இல்லை என்றும் கார்பரேட் நிறுவனங்களுக்கான பட்ஜெட் என்றும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் இந்த பட்ஜெட்டால் யாரெல்லாம் பலனடைவார்கள், யாரெல்லாம் ஏமாற்றமடைவார்கள் என்பதை பார்ப்போம். இந்தியாவின் விவசாயிகள், கிராம மக்கள், விவசாய தொடர்புடைய நிறுவனங்கள் ஆகியன பயனடையும். அதே சமயம் பத்திரங்கள் மீது முதலீடு செய்தவர்கள் சற்று ஏமாற்றமடைந்துள்ளனர்.

விவசாயிகளுக்கான திட்டங்கள்
நாடு முழுவதும் விவசாயிகள் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். விவசாய சந்தைகளில் முதலீடு செய்வதால் பயிர்களுக்கான குறைந்தபட்ச விலையை இந்த பட்ஜெட் உயர்த்துவது உறுதியாகும். பாசன திட்டங்கள், மீன் வளர்ப்பு திட்டங்கள், சோலார் மூலம் இயங்கும் பம்புகளை கொள்முதல் செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடுவது போன்ற திட்டங்களால் கிராமப்புற மக்களும், விவசாயிகளும் பயனடைவர். இதன் மூலம் விவசாயம் தொடர்புடைய நிறுவனங்களான சக்தி பம்ப் இந்தியா லிமிடெட் , கிர்லோஸ்கர் நிறுவனம், ஜேகே அக்ரி ஜெனிட்டிக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் பலனடையும்.

உடல் ஆரோக்கியம்
தேசிய சுகாதார பாதுகாப்பு திட்டத்தின் மூலம் 10 கோடி குடும்பங்களுக்கு, ஆண்டுக்கு, தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பெரிய மருத்துவ நிறுவனங்களான அப்பல்லோ மருத்துவமனைகள், போர்டிஸ் ஹெல்த்கேர் உள்ளிட்டவை அதிக லாபமடையும்.

சாலை மற்றும் ரயில்வே
சாலைகள் மற்றும் ரயில்வேக்களின் உள்கட்டமைப்பு குறித்து ஜேட்லி உறுதியளித்துள்ளார். அதன் மூலம் ரயில் பெட்டி தயாரிப்பு நிறுவனங்கள், லார்சன் மற்றும் டூப்ரோ நிறுவனம், ஐஆர்பி இன்ப்ராஸ்டர்கஸர் நிறுவனம் உள்ளிட்டவை பலனடையும்.

நகைகள்
கிராமப்புறங்களில் 60 சதவீதம் தங்கத்துக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. கிராமப்புறங்கள், பண்ணையாளர்களை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்வதில் கவனத்தில் கொண்ட பட்ஜெட் என்பதால் நகைக் கடைகள், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிக லாபமடையும்.

விமானங்கள்
மண்டல விமான நிலைய கட்டுமானத்தை விரிவாக்கம் செய்யவுள்ளதாக அரசு உறுதி அளித்திருப்பதால் ஜிஎம்ஆர் இன்ப்ராஸ்டிரக்ஸர் நிறுவனம் மற்றும் ஜிவிகே பவர் மற்றும் இன்ப்ராஸ்டிரக்ஸர் நிறுவனம் உள்ளிட்டவை லாபம் ஈட்ட முடியும்.
இந்த பட்ஜெட் யாருக்கு ஏமாற்றம் :

இறக்குமதி வரி
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க மொபைல் போன்களின் இறக்குமதி வரி 15 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதனால் ஆப்பிள், சாம்சங் நிறுவனங்களின் வருமானம் குறையும். இல்லாவிட்டால் இந்தியாவில் தொழிற்சாலை தொடங்கும் நிலைக்கு தள்ளப்படலாம். பத்திர முதலீட்டாளர்கள் பாதிக்கப்படுவர். ஈக்விட்டி இன்வெஸ்ட்மென்ட் மீது வரி விதிக்கப்பட்டுள்ளதால் நிதித் துறை பாதிக்கப்படும். இதனால் எல்ஐசி, மியூச்சுவல் பன்ட் வழங்கும் நிறுவனங்களான ஐடிஎஃப்சி லிமிடெட், ரிலையன்ஸ் கேபிட்டல், ஐசிஐசிஐ புருடன்ஷியல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், எச்டிஎஃப்சி உள்ளிட்டவை பாதிக்கப்படும்

டிஃபென்ஸ் துறை
பாதுகாப்பு தளவாடங்கள் மேம்படுத்தப்படும் என்று பாதுகாப்பு துறைக்கு உறுதி அளித்தார். ஆனால் இந்த பட்ஜெட்டில் அதுகுறித்த எந்த அறிவிப்பு இல்லாததால் பாதுகாப்பு துறை ஏமாற்றமடைந்துள்ளது.

கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான வரி
கல்வி மற்றும் சுகாதாரத்துக்கான வரி 3 சதவீதத்திலிருந்து 4 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் அதுதொடர்புடைய பொருட்களும் சேவைகளும் விலை உயரும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications