நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31-ல் தொடக்கம்... பிப். 1ல் பட்ஜெட் தாக்கல்
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் 31ம் தேதி தொடங்குகிறது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 1ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
டெல்லி: நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் இம்மாதம் 31ம் தேதி தொடங்கிறது. பொது பட்ஜெட்டும், ரயில்வே பட்ஜெட் இணைக்கப்பட்ட முதல் பட்ஜெட் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
புதிய ஆண்டு தொடங்கிய உடன் நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கும். அந்தக் கூட்டத்தில் ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். அதனைத் தொடர்ந்து பொது பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்படும். பாஜக அரசு மத்தியில் ஆட்சிக்கு வந்த பின்னர் சில நடைமுறைகளை மாற்றி வருகிறது. அதன்படி, இதுவரை தனித் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வந்த பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டு ஒரே பட்ஜெட்டாக இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்த ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குறித்த அமைச்சரவை ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. அதில், இம்மாதம் 31ம் தேதி பட்ஜெட் தொடர் தொடங்குவது என்று முடிவெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி முதல் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்த பட்ஜெட்டில் பொது பட்ஜெட்டும் ரயில்வே பட்ஜெட்டும் ஒன்றாக இணைக்கப்பட்டு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதன் மூலம் 92 ஆண்டுகாலம் நடைமுறையில் பொது பட்ஜெட், ரயில்வே பட்ஜெட் என்ற தனித் தனி பட்ஜெட் முறைகள் முடிவிற்கு வருகின்றன.
முன்னதாக பொருளாதார ஆய்வறிக்கை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கிய அதே நாளில் தாக்கல் செய்யப்பட உள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications