புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் வங்கதேச தீவிரவாதி கைது: விசாரணையில் 'திடுக்' தகவல்கள்
கொல்கத்தா: புர்த்வான் குண்டுவெடிப்பு வழக்கில் கைதான வங்கதேச தீவிரவாதி சாஜித் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்களை தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் புர்த்வானில் வங்கதேசத்தைச் சேர்ந்த ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் வெடிகுண்டு தாக்குதல் நடத்தினர். இந்த வழக்கில் ஜமாத்துல் முஜாஹிதீனின் புர்த்வான் கிளை தலைவர் சாஜித் மேற்கு வங்க போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

தீவிரவாதி ஜியா உல் ஹக்கின் கைதை அடுத்து சாஜித் கைது செய்யப்பட்டார். மதரஸாக்களில் இளைஞர்களை ஜிஹாத் இலக்கியங்களை படிக்குமாறு ஊக்கிவித்ததாக ஹக் மீது குற்றம் சாட்டப்பட்டது.
புர்த்வான் பிரிவுக்கு நான் தான் தலைவர் என்று சாஜித் விசாரணையில் ஒப்புக் கொண்டுள்ளார். அவர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர். அவர் புர்த்வான் கிளை செயல்களில் தனது மனைவி பாத்திமாவையும் ஈடுபடுத்தியுள்ளார். சாஜித், பாத்திமா தவிர 12 தம்பதிகள் இந்த கிளையில் செயல்பட்டுள்ளனர். இந்திய பெண்களை திருமணம் செய்து கொள்ளுமாறு சாஜித் ஜமாத்துல் முஜாஹிதீன் தீவிரவாதிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். அவர்கள் இந்திய பெண்களை மணந்தால் இங்கு எளிதில் குடியுரிமை பெற்றுவிடலாம்.
புர்த்வான் கிளையை பெரும்பாலும் தம்பதிகள் நடத்தவே சாஜித் விரும்புகிறார். மேலும் வங்கதேசத்தில் உள்ள ஜமாத்துல் முஜாஹிதீன் மத்திய குழுவுடன் தொடர்பில் இருந்தவர் சாஜித். புர்த்வான் கிளை துவங்கியதில் இருந்து அவர் கடந்த 4 ஆண்டுகளில் பல முறை வங்கதேசம் சென்று வந்துள்ளார்.
சாஜிதை தேசிய புலனாய்வுத் துறை தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்து விசாரணை நடத்த உள்ளது.
-
"நாளை மத்திய அரசு இருக்காது.. அப்போ உங்களை பார்த்துக்கறோம்.." போன் போட்டு மிரட்டிய மம்தா? பரபரப்பு -
மூத்த திரிணாமுல் தலைவர் மண்டை உடைப்பு.. ரத்தம் கொட்ட கொட்ட பானர்ஜி செய்த சம்பவம்! பரபரப்பு -
மகளிர் நிதி உதவித் திட்டம்.. 30 லட்சம் போலி பயனாளிகள்? மேற்கு வங்க சுவேந்து அதிகாரி உடனடி ஆக்ஷன் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications