கர்நாடகாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து: தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் பலி
துமகூரு: கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் உட்பட 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம், திப்டூர் தாலுகா, பிதரகுடி அடுத்த கொன்னஹள்ளி கிராமம் அருகே இந்த விபத்து நடந்தது. திருவண்ணாமலையில் இருந்து கிளம்பிய கர்நாடக அரசு பேருந்து பெங்களூர் வந்து, அங்கிருந்து ஷிமொக்காவுக்கு சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து எதிர் திசையில் ஷிமொக்காவில் இருந்து பெங்களுருக்கு வந்து கொண்டிருந்த பேருந்தின் மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.

இதில் இரண்டு பேருந்துகளின் டிரைவர்கள் உட்பட 8 பேர் இறந்தனர். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இறந்தவர்களில் சேலத்தைச் சேர்ந்த பிரகாஷ்(30), திருவள்ளூரைச் சேர்ந்த சீனிவாஸ்(35) ஆகியோரும் அடங்குவர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற துமகூரு போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெங்களுரு நிமான்ஸ் மருத்துவமனை, ஹாசன், சித்பூர், திப்டூர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
-
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications