ஜம்முவில் தீடீர் வெள்ளப்பெருக்கு: பேருந்து ஓடையில் சிக்கியதில் 50 பேர் பலி?
ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் ஓடையில் ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கில் சிக்கி பேருந்து ஒன்று அடித்துச் செல்லப்பட்டுள்ளது. அந்தப் பேருந்தில் திருமண விழாவிற்கு சென்றிருந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாக அஞ்சப் படுகிறது.
ஜம்மு காஷ்மீரில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று ரஜோரி மாவட்டத்தில் வெள்ளத்தில் சிக்கிய பேருந்து நீரில் அடித்து செல்லப்பட்டது.
விபத்துக்குள்ளான பேருந்தில் திருமண விழாவிற்குச் சென்றிருந்த 50க்கும் மேற்பட்டோர் இருந்ததாகவும், 6 பேர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பேருந்தில் இருந்த மீதி பயணிகளின் நிலை என்ன என்பது குறித்து தெளிவான தகவல்கள் இல்லை. இந்த விபத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அங்கு மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அலுவலகம் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளதாகவும், அவர்கள் மீட்பு மற்றும் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அந்த செய்தி தெரிவிக்கிறது.
ஜம்மு காஷ்மீரின் பெரும்பாலான நீர் நிலைகள் வெள்ளம் காரணமாக அபாய அளவைத் தாண்டி உள்ளது. எனவே, பல மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications